தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிமீடியா பட்டியற் கட்டுரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.[2][3]
Remove ads
சென்னை மாகாண முதல்வர்களின் பட்டியல்

சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம்[4] 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது. இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935இன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Legislative council)[5], எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது.[6] 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[7]
- குறிப்பு
Remove ads
சென்னை மாநில முதல்வர்களின் பட்டியல்

சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.[12] சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ன் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.[4]
- முதலமைச்சர்களின் கட்சியின் வண்ணக் குறிப்பு
- குறிப்பு
Remove ads
தமிழக முதல்வர்களின் பட்டியல்

சென்னை மாகாணம் 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[13] தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.[5]
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர் மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[14] முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை எற்படும்.
|
|
Remove ads
புள்ளிவிவரம்
- கட்சி வாரியாக முதலமைச்சர்களின் எண்ணிக்கை பட்டியல்
- கட்சி வாரியாக பட்டியல்
- கட்சி வாரியாக முதலமைச்சர்களின் எண்ணிக்கை
- கட்சி வாரியாக முதல்வர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள்
Remove ads
தற்போது வாழும் முன்னாள் முதல்வர்கள்
8 சூலை 2025 நிலவரப்படி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் இருவர் வாழுகின்றனர்:
- வாழுகின்ற முன்னாள் முதல்வர்கள்
குறிப்பிடத்தக்க பதிவுகள்
- மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். பதவியிலிருந்த காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள் (30 சூன், 1977 முதல் அவர் இறந்த நாளான 24 திசம்பர், 1987 வரை.)
- மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் வி. என். ஜானகி (சனவரி 17, 1988 முதல் சனவரி 30, 1988 வரை.)
- அதிக முறை (6) பொறுப்பேற்ற முதல்வர் ஜெ. ஜெயலலிதா.
- 24 சூன், 1991–12 மே, 1996,
- 14 மே, 2001–21 செப்டம்பர், 2001,
- 2 மார்ச், 2002–12 மே, 2006,
- 16 மே, 2011–27 செப்டம்பர், 2014,
- 23 மே, 2015 - 23 மே, 2016
- 23 மே, 2016– 5 திசம்பர், 2016
- அதிக ஆண்டுகள் (18 வருடங்கள்) முதல்வர் மு. கருணாநிதி.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
- தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அமைச்சரவை மீது ஆளுநரின் அதிகாரம் பிடிக்காததால், ஆட்சி அமைக்க மறுத்தது. மெட்ராஸ் கவர்னர் எர்ஸ்கின் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அல்லாத மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு ஒரு இடைக்கால தற்காலிக அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தார். சீனிவாச சாஸ்திரிக்கு முதலில் இடைக்கால அரசாங்கத்தின் முதலமைச்சர் பதவியை வழங்கினார் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார். இறுதியில் 1 ஏப்ரல் 1937 இல் குர்மா வெங்கட ரெட்டி நாயுடுவின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அது சூலை வரை நீடித்தது. பிறகு காங்கிரஸ் வைஸ்ராய் லின்லித்கோ உறுதிமொழியை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்தது
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads