தயமின்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தயமின் [Thiamine (அ) Thiamin] என்னும் உயிர்ச்சத்து பி1, உயிர்ச்சத்து பி குழுமத்தில் உள்ள நீரில் கரையக்கூடிய, கந்தக தொகுதியினைக் கொண்ட, தையோ விட்டமினாகும். இந்த உயிர்ச்சத்தானது உணவில் இல்லாதபோது பாதகமான நரம்பியல் சார்ந்த விளைவுகளை உருவாக்குவதால், முதலில் அநியூரின் என்றழைக்கப்பட்டது என்றாலும், பிறகு உயிர்ச்சத்து பி1 என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றது. இதனுடைய பாஸ்பேட்டு கிளைப் பொருள்கள் உயிரணு செயல்முறைகளில் ஈடுபடுகின்றன. இதன் நன்றாகக் கண்டறியப்பட்ட வடிவம், சர்க்கரை மற்றும் அமினோ அமிலச் சிதைவில் துணைநொதியாகத் திகழும் தயமின் பைரோபாஸ்பேட்டாகும் (TPP). நரம்பு பரப்பிகளான அசிட்டைல்கோலின் மற்றும் காமா அமினோ புயூட்டைரிக் அமிலம் ஆகியவற்றின் உயிரித்தொகுப்பில் தயமின் உபயோகப்படுகின்றது. மதுவத்தில் (ஈஸ்ட்), சாராய நொதித்தல் வினையின் முதல் கட்டத்திலும் தயமின் பைரோபாஸ்பேட் தேவைப்படுகிறது.
அனைத்து உயிரினங்களின் உயிர்வேதி வினைகளில் உபயோகப்படுத்தப்பட்டாலும், தயமின் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் தாவரங்களில் மட்டும்தான் உருவாக்கப்படுகின்றது. விலங்குகள் தங்களுடைய உணவிலிருந்து தயமினைக் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால், இது ஒரு அத்தியாவசிய உயிர்ச்சத்தாகும். பறவைகளுக்கு தங்கள் உணவுகளிலிருந்து போதுமான அளவு தயமின் கிடைக்காவிட்டால் நரம்புகளின் ஒட்டுமொத்த அழற்சியான, பல்நரம்பழற்சி (polyneuritis) என்ற நோய் உண்டாகிறது. அதேபோல், பாலூட்டிகளுக்கு தயமின் குறைபாட்டினால் பெரிபெரி என்னும் நோய் ஏற்படுகின்றது. இந்நோய், வெளி நரம்பு மண்டலம் (பல்நரம்பழற்சி) (மற்றும்/அல்லது) குருதிப்பாய்ம அமைப்பினைத் தாக்கும் தன்மையுள்ளது. தயமின் கொடுக்கப்பட்டு இக்குறை நிவர்த்திக்கப்படாவிட்டால் உயிர்ச்சேதம் நிகழலாம்[1]. குறைந்த அளவு தயமின் குறைபாட்டினால் உடல்சோர்வு, எடை குறைதல், உறுத்துணர்ச்சி (எரிச்சலூட்டும் தன்மை) மற்றும் குழப்பம் ஆகிய பொதுவான அறிகுறி்கள் தோன்றும்[2].
தயமின் குறைபாடு எந்தவிதமான துல்லிய வினைவழி முறைகளில் குறிப்பிட்ட நோய் அறிகுறிகளை உருவாக்குகிறது என்று கண்டறியும் ஆய்வுகள் தற்பொழுதும் நடந்தவண்ணம் உள்ளன. அண்மையில் புதியதாக கண்டறியப்பட்டுள்ள தயமின் பாஸ்பேட்டு கிளைப்பொருள்கள்,[3] தயமினின் சிக்கலான வளர்சிதைமாற்றத்தினை வலியுறுத்துகின்றன.
மேம்படுத்தப்பட்ட மருந்தியக்கத் தாக்கியலைக் கொண்ட, தயமின் கிளைப்பொருள்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இப்பொருட்கள் தயமின் குறைபாட்டினால் விளையும் அறிகுறிகளைத் தணிவு செய்வதிலும், மற்ற தயமின் தொடர்புடைய நிகழ்வான சர்க்கரை நோயிலுள்ள குளுக்கோஸ் வளர்சிதைமாற்ற குறையை மட்டுப்படுத்துவதிலும் மிகுதிறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.





சில உதாரணங்கள்: தயமின் அலைல் டைசல்பைடு (TAD), தயமின் புரோபைல் டைசல்பைடு (TPD), தயமின் டெட்ராஹைட்ரோஃபர்ஃபுரைல் டைசல்பைடு (TTFD), பென்ஃபோதயமின் மற்றும் சல்புதயமின்.
Remove ads
வேதிப்பண்புகள்
தயமின் ஒரு நிறமற்ற வேதி சேர்மமாகும். இதன் வாய்பாடு: C12H17N4OS. அமினோபிரிமிடின் வளையமும், மீதைல் மற்றும் ஐட்ராக்சிஈதைல் தொகுதிகளை பக்கத்தொடரியாகக் கொண்ட தயசோல் வளையமும் மெத்தீலீன் பாலத்தால் இணைக்கப்பட்ட வடிவத்தினைக் கொண்டது. தயமின், நீர், மெத்தனால் மற்றும் கிளிசராலில் கரையக்கூடியது. அசிட்டோன், குளோரோஃபார்ம், பென்சீன் மற்றும் ஈதரில் கரையாது. தயமின் அமிலத் திரவங்களில் நிலையானது; ஆனால், காரத் திரவங்களில் நிலையற்றது[1][4]. பல்லினவட்ட கார்பீனான தயமினை, சயனைடிற்குப் பதிலாக பென்சாயின் குறுக்கத்தில் வினையூக்கியாக உபயோகப்படுத்த முடியும்[5][6]. தயமின் உயர் வெப்பத்தில் நிலையற்றதாகவும், உறைநிலையில் நிலையானதாகவும் உள்ளது. புறஊதா ஒளி[4] மற்றும் காமாக் கதிரியக்கத்தில்[7][8] வெளிப்படுத்தப்படும்போது நிலையற்றதாக உள்ளது. மெயிலார்ட் வினைகளில் தயமின் வலிமையாக வினைபுரிகின்றது[1].
Remove ads
உயிரித்தொகுப்பு

.
சிக்கலான தயமின் உயிரித்தொகுப்புகள் பாக்டீரியா, சில முதலுயிரிகள், பூஞ்சை மற்றும் தாவரங்களில் நடைபெறுகின்றது[10][11].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads