தயாராம் சகானி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராவ் பகதூர் தயாராம் சகானி (Daya Ram Sahni) (16 டிசம்பர் 1879 7 மார்ச் 1939), சிந்து வெளி தொல்லியல் களமான அரப்பாவில் 1921 - 22 ஆண்டுகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநர் ஜான் மார்ஷலுடன் இணைந்து அகழ்வாய்வுகள் மேற்கொண்டவர். தயாராம் சகானி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1931 முதல் 1935 முடிய பதவி வகித்தார்.

விரைவான உண்மைகள் தயா ராம் சகானி, பிறப்பு ...
Remove ads

தொல்லியல் ஆய்வாளராக

தயாராம் சகானி, 1903ல் பிரித்தானிய பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாகாண சரகத்தில் தொல்லியல் ஆய்வாளராக, ஜெ. பி. வேகில் தலைமையில் பணியாற்றினார். தயாராம் சகானி, 1906ல் பிகாரில் உள்ள ராஜகிரகத்தில் அகழாய்வுகள் மேற்கொண்டார்.

செப்டம்பர், 1907ல் பிகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ராம்பூர்வா மற்றும் சாரநாத் பௌத்த தொல்லியல் களங்களை, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநர் ஜான் மார்ஷலுடன் இணைந்து அகழாய்வுகள் மேற்கொண்டவர்.

தயாராம் சகானி 1911 முதல் 1912 முடிய லக்னோ அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார்.

1917ல் பஞ்சாப் மாகாணம் மற்றும் ஐக்கிய மாகாணத்தின் தொல்லியல் துறையின், லாகூர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளராக பதவியேற்றார். தயாராம் சகானி சிந்து வெளி களத்தின் அரப்பாவில் அகழ்வாய்வுப் பணிகளில் கலந்துகொண்டார்.

தயாராம் சகானி, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக, 1931 முதல் 1935 முடிய தில்லியில் பணியாற்றினார்.[1] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக பதவியேற்ற முதல் இந்தியர் என்ற பெருமை தயாராம் சகானிக்கு உண்டு.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads