தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர் செராஸ் பகுதியில் உள்ள நிலத்தடி நிலையம் From Wikipedia, the free encyclopedia

தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம்map
Remove ads

தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Pertama MRT Station; மலாய்: Stesen MRT Taman Pertama) என்பது மலேசியா, கோலாலம்பூர் செராஸ் பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் KG23 தாமான் பெர்த்தாமா, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் தற்போது 1 மலேசிய கூட்டரசு சாலை 1 செராஸ் சாலையில் உள்ளது. இந்தச் சாலைக்கு அருகில் லோக் இயூ சாலை; யாக்கோப் லத்தீப் சாலைகள் உள்ளன.

Remove ads

பொது

சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[1]

மாலூரி நிலத்தடி நிலையத்திற்குப் பிறகு காஜாங் வழிதடத்தில் இதுவே முதல் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையக் கட்டுமானத்தின் போது தற்காலிகமாக தாமான் புக்கிட் ரியா (Taman Bukit Ria) நிலையம் என்று அழைக்கப்பட்டது.

இந்த நிலையம் அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளான தாமான் பெர்த்தாமா, தாமான் புக்கிட் ரியா, கோலாலம்பூர் மாநகராட்சியின் பொது குடியிருப்பு வளாகங்கள்; மற்றும் பண்டார் துன் ரசாக்கின் சில பகுதிகளுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் தற்போது செயல்படாத செராஸ் மிதிவண்டியோட்ட அரங்கிற்கு (Cheras Velodrome) அருகிலும் உள்ளது.

Remove ads

நிலைய அமைப்பு

இந்த நிலையம், காஜாங் வழிதடத்தில் உள்ள பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை மட்டம் உள்ளது.

இந்த நிலையத்தில் இரட்டை வழிதடத்துடன் இரண்டு பாதுகாப்பான பக்க நடைமேடைகள்; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகள் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

L2 நடைமேடை பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங் தொடருந்து  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (→) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் B
G தரை மட்டம் நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) 2/90 சாலை (→) பெர்த்தாமா சாலை (→) செராஸ் சாலை (→) கோலாலம்பூர் மிதிவண்டியோட்ட அரங்கம்
Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இடம் ...

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...
Remove ads

காட்சியகம்

தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம் (2023)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads