தாயம்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாயம்மா (Thayamma) என்பது 1991 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கோபி பீம்சிங் இயக்கியிருந்தார். இப்படத்தில் பாண்டியன், ஆனந்த் பாபு, பாபு ஆகியோருடன் கீதாவும் ஒரு தலை ராகம் சங்கரும் நடித்திருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமான தூவல்சுபர்சத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படம் 1987 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமான திரீ மென் அண்டு எ பேபி என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த அமெரிக்கத் திரைப்படமும் 1985 இன் பிரெஞ்சு திரைப்படமான திரீ மென் அண்ட் எ கிரேடிலை அடிப்படையாகக் கொண்டது.[1]
Remove ads
கதைச்சுருக்கம்
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று இளைஞர்களான பாண்டியன், ஆனந்த், பாபு ஆகியோர் நண்பர்களாகவும் அறைத் தோழர்களாகவும் இருக்கின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் படிப்பு படிக்கும் இரங்கராஜன் இவர்களது பக்கத்து வீட்டுக்காரர். பாண்டியன் ஒருநாள், தான் இல்லாத நேரத்தில் ஒரு பொட்டலம் வரும் என்று தன் நண்பர்களை எச்சரிக்கிறான். மறுநாள், ஆனந்தும் பாபுவும் தங்கள் வீட்டு வாசலில் ஒரு குழந்தையைக் கண்டனர். மூன்று இளைஞர்களும் அவளுக்கு தந்தை இல்லை என்று நம்புகின்றனர். அப்போதிருந்து, அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. முதலில் குழந்தையை கைவிட முயல்கிறார்கள் ஆனால் பின்னர் குழந்தையை கவனித்து தாயம்மா என்று பெயரிடுகிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் மையமாக அமைகிறது.
Remove ads
நடிகர்கள்
- பாண்டியனாக பாண்டியன்
- ஆனந்தாக ஆனந்த் பாபு
- பாபுவாக பாபு
- தாயம்மாவாக பேபி இராதா
- இரங்கராஜனாக சங்கர்
- சிசுபாலனாக கவுண்டமணி
- அழகப்பனாக செந்தில்
- கல்யாணியாக கீதா
- கௌரி
- பூதலிங்கமாக வெண்ணிற ஆடை மூர்த்தி
- இரா. சங்கரன்
- ஆனந்தின் மாமாவாக ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- டைப்பிஸ்ட் கோபு
- விக்ரமன்
- எம். என். ராஜம்
- பிருந்தா
- மணி மீனு
- சுருதி
- பிரேமி
பாடல்கள்
கங்கை அமரனின் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads