தாய்க்குலமே தாய்க்குலமே
1995 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாய்க்குலமே தாய்க்குலமே (Thaikulame Thaikulame) என்பது 1995 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். என். முருகேஷ் இயக்கிய படத்திற்கான கதையை கே. பாக்யராஜ் எழுதினார். இப்படத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, வினயா பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வடிவேலு, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பட்த்திற்கு தேவா இசையமைத்தார். படம் ஒரு வெற்றிப்படமாக ஆனது.[2] இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இன்ட்லோ இல்லாலு வண்டிண்ட்லோ பிரியுரலு என்றும், இந்தியில் அனில் கபூர் கர்வாலி பஹர்வாலியாகவும் என்றும், கன்னடத்தில் வீ. ரவிச்சந்திரன் நானு நன்ன ஹெண்ட்தியரு என்றும் மாறு ஆக்கம் செய்யப்பட்டன.
Remove ads
கதை
பாண்டியராஜனுக்கும் ஊர்வசிக்கும் திருமணமாகி நீண்டகாலமாகியும் குழந்தைகள் இல்லை. தனது மனைவியால் குழந்தையைப் பெற்ற இயலாது என்பதை மருத்துவர் மூலம் பாண்டியராஜன் அறிகிறார். மனைவியின் உணர்வை புண்படுத்த மனமில்லாமல், அவர் தனது மீதே பழியை ஏற்றுக்கொள்கிறார். அவரது தந்தை (ஆர். சுந்தர்ராஜன்) ஒரு வாரிசு வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பாண்டியராஜனிடம் கூறுகிறார். நேபாளத்திற்கு வணிக சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளில் நேபாளி பெண்ணை (வினயா) பாண்டியராஜன் திருமணம் செய்கிறார். இதன்பிறகு அவளது வயிற்றில் பாண்டியராஜனின் குழந்தை உருவாகி வளர்கிறது. இதன்பிறகு பாண்டியராஜன் தனது நண்பரின் வீட்டில் அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார். வினயாவுக்கு ஒரு மகன் பிறக்கிறான். பாண்டியராஜன் தனது மனைவியின் சம்மதத்துடன் அக்குழந்தையை தத்தெடுக்கிறார். தனது குழந்தையின் அருகில் இருக்க வேண்டும் என்ற தன் ஆசையை அடக்க முடியாமல், நேபாளி பெண் தன் கணவரின் வீட்டிற்கு சமையல்காரியாக வருகிறாள். பாண்டியராஜனின் தந்தை உண்மையை அறிந்து தனது மகனிடம் வினயாவை ஏற்று ஊர்வசிக்கு விஷயத்தை விளக்குமாறு சொல்கிறார். ஆனால் மனைவியின் எதிர்வினைக்கு பயந்த பாண்டியராஜன் முழு விசயத்தையும் மூடி மறைக்குமாறு தந்தையிடம் கெஞ்சுகிறார். ஊர்வசி, வினயாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும்போது கதை உச்சகட்டத்துக்கு வந்து ஒரு திருப்பம் ஏற்படுகிறது. பின்னர் ஊர்வசி சமரசத்திற்கு வந்து, இரு மனைவிகளும் கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக முடிகிறது.
Remove ads
நடிகர்கள்
இசை
படத்திற்கான இசையை தேவா மேற்கொள்ள, பாடல் வரிகளை வாலியும், வைரமுத்துவும் எழுதியிருந்தனர்.[3][4]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (நிமிட: நொடி) |
1 | என் வீட்டுத் தோட்டத்தில் | மனோ, எஸ். ஜானகி | வைரமுத்து | 05:08 |
2 | இந்திரனோ சந்திரனோ | எஸ்.ஜானகி, மனோ | 04:49 | |
3 | நேபாள மலை ஓரம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | 05:08 | |
4 | ஒரு வட்ட முகத்தில் | எஸ். பி. பாலசுப்ரமண்யம், சுவர்ணலதா | 05:07 | |
5 | பாலு பாலு நேபாலு | வதிவேலு | வாலி | 04:28 |
6 | ரெடித்தடி | சிந்து | வைரமுத்து | 02:00 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads