தாராசிவா மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாராசிவா மாவட்டம் (பழைய பெயர்: உஸ்மானாபாத் மாவட்டம்), இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் உள்ளது. இது அவுரங்காபாத் மண்டலத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் தாராசிவா[2] நகரத்தில் உள்ளது. புகழ் பெற்ற துளஜாபவானி கோயில் இந்த மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 7569 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [3] இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் அமைந்துள்ளன. தாராசிவா குகைகள் இம்மலைகளில் உள்ளது.
Remove ads
மாவட்டப் பெயர் மாற்றம்
உஸ்மானாபாத் மாவட்டத்தின் பெயரை தாராசிவா மாவட்டம் எனப்பெயர் மாற்றி, சூலை 2022ஆம் ஆண்டில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராட்டிரா அரசின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.[4] இதனை அடுத்த வந்த ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு செப்டம்பர் 2023ல் அதனை உறுதி செய்தது.[5][6]மேலும் மாவட்டப் பெயர் மாற்றம் செய்ததை எதிர்த்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[7][8]
வட்டங்கள்
இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[9]
- உஸ்மானாபாத்
- துளஜாபூர்
- உமர்கா
- லோஹாரா
- களம்பு
- பூம்
- வாசி
- பராண்டா
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 1,660,311 மக்கள் வாழ்ந்தனர். [3]
இந்த மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்குள் 219 பேர் வாழ்வதாக மக்கள் அடர்த்தி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. [3] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 920 பெண்கள் இருப்பதாக பால் விகிதக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. [3] இங்கு வாழ்வோரில் கல்வியறிவை 76.33% பேர் பெற்றுள்ளனர்.[3]
அரசியல்
சிவ சேனா , காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகியன இங்குள்ள பெரிய கட்சிகள் [10][11]
இந்த மாவட்டத்தை பாராளுமன்றத்தில் முன்னிறுத்துபவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [12]
போக்குவரத்து
இந்த மாவட்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம். இங்கு ரயில் நிலையங்களும் உள்ளன.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads