தாராசுரம்
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணதில் இருக்கும் ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாராசுரம் (ஆங்கிலம்:Darasuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு உலகப்பெற்ற ஐராவதேசுவரர் கோயில் உள்ளது. இது வணிக நகரமான கும்பகோணத்தின் புறநகர் பகுதி ஆகும்.
Remove ads
2021-இல் புதிய கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைத்தல்




தாராசுரம் பேரூராட்சியை அக்டோபர், 2021-இல் புதிதாக நிறுவப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4][5]
அமைவிடம்
தாராசுரம் பேரூராட்சி தஞ்சாவூரிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
2.3 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,931 வீடுகளும் 15,787 மக்கள்தொகையும் கொண்டது.[7][8][9]
சப்தஸ்தானம்
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.[10]
இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[11]
வரலாற்றுச் சிறப்பு

இவ்வூர் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.
இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads