திமிக்கா

இந்தோனேசியாவிலுள்ள மாநகரம் From Wikipedia, the free encyclopedia

திமிக்காmap
Remove ads

திமிக்கா (இந்தோனேசியம்: Kota Timika; ஆங்கிலம்: Timika) என்பது இந்தோனேசியா, மத்திய பப்புவா மாநிலம், மிமிக்கா பிராந்தியத்தில் உள்ள ஒரு மாநகரமாகும். இந்த நகரம் மிமிக்கா பிராந்தியத்தின் தலைநகரமாகவும் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் திமிக்கா Timika Kota Timika, நாடு ...

இந்த நகரம் மத்திய பப்புவாவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அந்த நகரமும் அதன் பிராந்தியமும் ஒருசேர 142,909 மக்கள் தொகையைக் கொண்டிருந்தன.[3][4]

Remove ads

பொது

திமிக்கா என்பது சுரங்கத் தொழில், மற்றும் தொழில் சார்ந்த சேவைகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியில் பல்வேறு தேசிய அளவிலான நிறுவனங்கள் செயல்படுகின்றன. திமிக்கா தற்போது பப்புவாவில் இருக்கும் வெளிநாட்டு நாட்டினர் குழுமத்திலும் (Warga Negara Asing) உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர், இந்தோனேசிய பிடி பிரிபோர்ட் நிறுவனத்தில் (Freeport Indonesia) வேலை செய்கிறார்கள்.

அவர்களில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், கனடா, ஆத்திரேலியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த 2,000 வெளிநாட்டவர்கள் இங்குள்ள சுரங்கத் தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.[5]

Remove ads

வானூர்தி போக்குவரத்து

ஆகத்து 2012-இல், இந்தோனேசிய அரசாங்கம் திமிக்காவில் ஒரு புதிய வணிக வானூர்தி நிலையத்தை உருவாக்கும் திட்டங்களை அறிவித்தது. மோசஸ் கிலாங்கின் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Mozes Kilangin International Airport), தற்போதுள்ள வானூர்தி நிலையத்தை ஒட்டிய 800x300 மீ நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. புதிய நிலையம் ஒரு புதிய வரவேற்பு அறையையும் ஓடுபாதையையும் கொண்டுள்ளது.[6]

ஆகத்து 15, 2014 முதல், கருடா இந்தோனேசியா வானூர்தி நிறுவனம், 84 மலிவுவிலை இருக்கைகளையும்; 12 வணிக வகுப்பு இருக்கைகளையும் கொண்ட பாம்பார்டியர் (CRJ-1000 Bombardier CRJ700 series), வானூர்தியுடன், திமிக்கா-சோரோங்-மனாடோ வழித்தடத்தில் வாரத்திற்கு 3 முறை சேவை செய்து வருகிறது.[7]

Remove ads

காலநிலை

திமிக்கா நகரம், வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் (Af) கொண்டது; ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும்.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், திமிக்கா, (கொக்கோனாவோ வானூர்தி நிலையம்), (2020), மாதம் ...
Remove ads

காட்சியகம்

  • திமிக்கா காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads