திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன்
திராங்கானு மாநிலத்தின் 16-ஆவது சுல்தான் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன் அல்லது சுல்தான் இசுமாயில் நசிருதீன் சா இப்னி சைனல் அபிதீன் III முவாசாம் சா; (ஆங்கிலம்: Terengganu Sultan Ismail Nasiruddin அல்லது Sultan Ismail Nasiruddin Shah; மலாய்: Sultan Ismail Nasiruddin Shah அல்லது Sultan Ismail Nasiruddin Shah ibni Sultan Zainal Abidin III Mu’azzam Shah) (24 சனவரி 1907 – 20 செப்டம்பர் 1979) என்பவர் மலேசியாவின் 4-ஆவது அரசரும்; திராங்கானு மாநிலத்தின் 16-ஆவது சுல்தானும் ஆவார். இவர் 1965 முதல் 1970 வரை மலேசியாவின் அரசராகவும் பதவி வகித்தார்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
கோலா திராங்கானுவில் 16 மார்ச் 1906-இல் பிறந்த இவர்,[1][2] திராங்கானு சுல்தான் சைனல் அபிதீன் III (ஆட்சி 1881–1918) என்பவரின் ஐந்தாவது மகனாவார். இவரின் தாயார் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சிக் மைமுனா பிந்தி அப்துல்லா; முசுலிம் மதத்திற்கு மதம் மாறியவர்; 1918-இல் காலமானார்.[3]
கோலா திராங்கானு மலாய் பள்ளியில் கல்வி பயின்ற சுல்தான் இசுமாயில் நசிருதீன், பின்னர் கோலா கங்சார் மலாய் கல்லூரிக்குச் சென்றார்.[4] 1929-ஆம் ஆண்டு, அவர் திராங்கானு மாநில நிர்வாகப் பணியில் சேர்ந்தார். 1934-ஆம் ஆண்டு, கோலா திராங்கானுவில் நில வருவாய்த் துறையின் உதவி ஆட்சிப்பணி அதிகாரியாக (Assistant Collector of Land Revenue) நியமிக்கப்பட்டார்.
அரசு பதவிகள்
1935-ஆம் ஆண்டில், அவர் தன்னுடைய மூத்த சகோதரர் சுல்தான் சுலைமான் பத்ருல் ஆலாம் சாவிற்கு (Sulaiman Badrul Alam Shah of Johor) உதவியாளராக நியமிக்கப்பட்டார். மே 12, 1937 அன்று ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் முடிசூட்டு விழாவிற்கு தன்னுடைய மூத்த சகோதரர் சுலைமான் பத்ருல் ஆலாம் சாவுடன் இங்கிலாந்திற்குச் சென்றார்.
1939-இல், அவர் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளராகப் பொறுப்பு ஏற்றார். பின்னர் அவர் நில நீதிமன்றப் பதிவாளராகவும் பணியாற்றினார். 1940-இல், அவர் தெங்கு செரி படுக்கா ராஜா (Tengku Sri Paduka Raja) எனும் இளவரசர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர், திராங்கானு மாநில அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1941-இல், அவர் முதல் வகுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்; மற்றும் நவம்பர் 15, 1941 அன்று திராங்கானு மாநிலச் செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.[5]
இறப்பு
சுல்தான் இசுமாயில் நசிருதீன் இரண்டு முறை மாரடைப்பினால் அவதிப்பட்டு 20 செப்டம்பர் 1979 அன்று கோலா திராங்கானு இசுதானா பதரியாவில் காலமானார். மேலும் ஒரு நாள் கழித்து கோலா திராங்கானு அரச கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[6]
அவருக்குப் பிறகு அவரின் மூத்த மகன் திராங்கானு சுல்தான் மகமூத் (Mahmud of Terengganu) திராங்கானு மாநிலத்தின் சுல்தானாக ஆட்சிக்கு வந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads