பெண்டகாரா அரசமரபு
மலேசியாவின் பகாங், திராங்கானு, ஜொகூர் மாநிலங்களின் அரச மரபு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெண்டகாரா அரசமரபு (மலாய்: Wangsa Bendahara ; ஆங்கிலம்: House of Bendahara) என்பது மலேசியாவின் பகாங், திராங்கானு, ஜொகூர் மாநிலங்களைத் தற்போது ஆட்சி செய்யும் அரச மரபாகும். இந்த அரச மரபைச் சார்ந்தவர்கள் உயர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
13-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, பெண்டகாரா அரசமரபினர், சிங்கபுர இராச்சியம் (Kingdom of Singapura), மலாக்கா சுல்தானகம் மற்றும் பழைய ஜொகூர் அரசவைகளில் (Old Johor); பெண்டகாரா (மலாய் பிரபுக்களின் மிக உயர்ந்த பதவி) எனும் பரம்பரைப் பதவியை வகித்து வருகின்றனர்.[1]
Remove ads
வரலாறு
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மலாக்கா அரச மரபைச் சேர்ந்த ஜொகூர் மன்னராட்சியின் கடைசி ஆட்சியாளரான ஜொகூர் சுல்தான் இரண்டாம் முகமது சா (Mahmud Shah II of Johor) ஆண் வாரிசு இல்லாமல் இறந்தபோது, அரச மரபாக அவருடைய குடும்பத்தினரின் ஆதிக்கம் தொடங்கியது. 1699-ஆம் ஆண்டில், ஜொகூரை ஆட்சி செய்த பெண்டகாரா துன் அப்துல் ஜாலீல் என்பவர் ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் ஜாலீல் சா (Abdul Jalil Shah IV of Johor) எனும் அரச பெயரில் ஜொகூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் ஜொகூர் சுல்தானகத்தில் பெண்டகாரா ஆட்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜொகூர் சுல்தானகத்தின் வெவ்வேறு குடும்ப உறுப்பினர்கள் சுல்தான் மற்றும் பெண்டகாரா பட்டங்களையும்; தெமாங்கோங் பட்டத்தையும் பெற்றனர்.[2]
பகாங் இராச்சியம்
அதே கட்டத்தில், பகாங் ஒரு சிறப்பு மாநிலமாக நிறுவப்பட்டது. அடுத்தடுத்து வந்த பகாங் பெண்டகாராக்கள் பகாங் மாநிலத்தைத் தங்களின் சொந்த நிலமாக அதிகார ஆட்சி செய்தனர். 1770-ஆம் ஆண்டில், ஜொகூர் பேரரசு (Johor Empire) படிப்படியாக. கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் ஜாலீல் சா என்பவரின் பேரன் பகாங் துன் அப்துல் மஜீத் (Tun Abdul Majid of Pahang) ஆட்சியின் கீழ் பகாங் இராச்சியம் ஒரு தன்னாட்சி இராச்சியமாக மாற்றப்பட்டது. அவரின் சந்ததியினர் பகாங்கை தொடர்ந்து ஆட்சி செய்தனர்.
தெமாங்கோங் அரச மரபு
ஜொகூர் பேரரசில் இருந்து பிரிந்து சென்ற மற்றொரு மாநிலமான ரியாவ்-லிங்கா சுல்தானகம், ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் ஜாலீல் சா என்பவரின் கொள்ளுப் பேரனான அப்துல் ரகுமான் முவாசாம் சா (Abdul Rahman Muazzam Shah of Johor) சந்ததியினரால் 1911-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்யப்பட்டது.
மற்றொரு துணை அரச மரபான தெமாங்கோங் அரச மரபினர் (House of Temenggong); ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் ஜாலீல் சா அவர்களின் மற்றொரு பேரன் தெமாங்கோங் அப்துல் ஜமால் (Temenggong Abdul Jamal) வழித்தோன்றல்களின் மூலமாக தற்போதைய ஜொகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது.
திராங்கானு மகாராஜா
ஜொகூர் பெண்டகாரா அரச மரபின் ஆண் வழித்தோன்றல்களின் வழியாக, மற்றொரு கிளை திராங்கானுவை ஆட்சி செய்து வருகிறது. மகாராஜா என்ற பட்டத்துடன் 1717-ஆம் ஆண்டில் இருந்து அந்த ஆளுமை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் ஜாலீல் சா அவர்களின் தம்பி துன் சைனல் அபிதீன் (Tun Zainal Abidin), திராங்கானுவின் முதல் சுல்தான் ஆவார்.[3]
Remove ads
ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியாளர்கள்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads