திரிபுரா இராச்சியம்
சுதேச மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரிபுரா இராச்சியம் (Tripura State, also known as Hill Tipperah),[1] வடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்கிய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியம் ஆகும். திரிபுரா இராச்சியத்தின் தலைநகரம் அகர்தலா ஆகும். அகர்தலாவில் இதன் தலைமை அலுவலகம் உஜ்ஜயந்தா அரண்மனையில் செயல்பட்டது.[2] தற்போது இந்த இராச்சியம் வடகிழக்கு இந்தியாவில் திரிபுரா மாநிலமாக உள்ளது.





Remove ads
வரலாறு
1684 முதல் வடகிழக்கு இந்தியாவில் மாணிக்கிய அரச மரபு மன்னர்களால் சுதந்திரமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது திரிபுரா இராச்சியம். திரிபுரா இராச்சியம் கி.பி. 14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கிழக்கே வங்காளத்தின் முழுப்பகுதியையும், வடக்கிலும் மேற்கிலும் பிரம்மபுத்திரா நதிக்கரை வரையிலும், தெற்கே வங்காள விரிகுடா மற்றும் கிழக்கில் பர்மாவையும் எல்லைகளாகக் கொண்டு இருந்தது.
1809 முதல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஏற்படுத்திய துணைப்படைத் திட்டப்படி, பிரித்தானியக் கம்பெனி ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக மாறியது. [3]
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 1949-இல் திரிபுரா இராச்சியம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. [4][5] 1963 சூலை 1 அன்று திரிபுரா, ஒன்றிய ஆட்சிப்பகுதியானது. 1972-இல் திரிபுரா தனி மாநிலமாக நிறுவப்பட்டது.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
1941-இல் திரிபுரா இராச்சியம் 10,660 சதுர மைல் பரப்பளவும், 1463 கிராமங்களும், 5,13,000 மக்கள்தொகையும் கொண்டிருந்தது. இந்த இராச்சிய மக்கள் வங்காள மொழி மற்றும் காக்பரோக் மொழிகளை பேசினர்.
ஆட்சியாளர்கள்
- இரண்டாம் இரத்தின மாணிக்கியா - 1684 – 1712
- மகேந்திர மாணிக்கியா - 1712 – 1714
- இரண்டாம் தர்ம மாணிக்கியா - 1714 – 1732 (முதல் முறை)
- ஜெகத் மாணிக்கியா - 1732 – 1733
- மூன்றாம் முகுந்த மாணிக்கியா - 1733 – 1737
- இரண்டாம் ஜெய் மாணிக்கியா - (முதல் முறை) 1737 – 1739
- இந்திரஸ்சிய மாணிக்கியா - 1739 – 1743
- மூன்றாம் விஜய மாணிக்கியா - 1743 – 1760
- கிருஷ்ண மாணிக்கியா - 1760 – 1761
- பலராம் மாணிக்கியா - 1761 – 1767
- கிருஷ்ன மாணிக்கியா (இரண்டாம் முறை) - 1767 –1783
- இரண்டாம் இராஜதார மாணிக்கியா - 1783 – 1804
- இராமகங்கா மாணிக்கியா - 1804 – 1809
- துர்கா மாணிக்கியா - 1809 – 1813
- இராமகங்கா மாணிக்கியா (இரண்டாம் முறை) - 1813 – 1826
- காசிசந்திர மாணிக்கியா - 1826 – 1830
- கிருஷ்ண கிசோர் மாணிக்கியா - 1830 – 1849
- ஈசான சந்திர மாணிக்கியா - 1849 – 1862
- வீரச்சந்திர மாணிக்கியா - 1862 –1896
- இராதே கிசோர் மாணிக்கியா - 1896 – 1909
- வீரேந்திர கிசோர் மாணிக்கியா - 1909 – 1923
- வீரவிக்கிரம் கிசோர் தேவ வர்மன் - 1923 – 1947
- கீர்த்தி விக்கிரம் கிசோர் தேவ வர்மன் - 1947 – 15 அக்டோபர் 1949
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads