திருநாவாய் தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநாவாய் தொடருந்து நிலையம் (Tirunnavaya railway station)[1] என்பது கேரளத்தின் மலப்புரம், எடக்குளம்-திருநாவாயில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். திருநாவாயாயின் நிலையக் குறியீடு TUA (குறியீடு:TUA). [2] இது தென்னக இரயில்வேயின் பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது. இது மலப்புறம் மாவட்டத்தில் மூன்றாவது பெரிய தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின் பழமையான தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் மற்றும் புத்தனத்தாணி நகரங்களுக்கு பயன்படும் செய்யும் ஒரு முதன்மையான தொடருந்து நிலையம் ஆகும்.
Remove ads
வரலாறு
கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் திரூருக்குத் தெற்கே எட்டு கிமீ (5.0 மைல்) தொலைவில் அமைந்துள்ள திருநாவாய் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இந்த இடம் நிலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநாவாய் ஊராட்சிக்கு உட்பட்ட எடகுளத்தில் திருநாவாய் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், எடக்குளம் ஊராட்சியில் மிகப்பெரிய வர்த்தக மையமாக இருந்தது. இந்த பகுதி விடுதலைப் போராட்டத்தின் போது மலபார் கலகத்தில் (1921) முக்கிய பங்கு வகித்தது. போராட்டக்காரர்கள் அந்த இடத்தில் பிரித்தானியப் படைகளால் சிறையில் அடைக்கப்பட்டனர். கோழிக்கோட்டில் இருந்து எடகுளம் தொடருந்து நிலையத்திற்கு ஹெர்மன் குண்டர்ட் வந்தபோது, புழக்கால் முகமது என்பவர் அவரை மாட்டு வண்டியில் கொடகலுக்கு அழைத்து வந்தார். தவனூர் மணக்கால் வாசுதேவன் நம்பூதிரி மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தபோது, எடக்குளம் தொடருந்து நிலையத்துக்கு திருநாவய் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Remove ads
நிலையத்தைக் கடந்து செல்லும் தொடருந்துகள்
திருநாவாய் தொடருந்து நிலையம் வழியாக செல்லும் தொடருந்துகள்
- கண்ணனூர் விரைவு வண்டி,
- ஆலப்புழா விரைவு வண்டி,
- கோயம்புத்தூர்-மங்கலூர் பயணிகள் வண்டி,
- மங்களூர்-கோயம்புத்தூர் அதிவிரைவு வண்டி. ,
- கண்ணூர்-கோயம்புத்தூர் பயணிகள் வண்டி
சேவையளிக்கும் தொடருந்துகள்
திருநாவாய் தொடருந்து நிலையத்தில் நிற்கும் தொடருந்துகள். [3] [4]
Remove ads
பொருள் கொட்டகை
தென்னக இரயில்வே இந்த நிலையத்தில் சரக்குகளைக் கையாள கொட்டகையை அமைத்துள்ளது. [5] இதனால் இங்கு அடிக்கடி சரக்கு தொடருந்துகள் நின்று சரக்குகளைக் கையாள்கிறது.
அம்சங்கள்
திருநாவாய் தொடருந்து நிலையம் திரூர் தொடருந்து நிலையத்திற்கும் குட்டிபுரம் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆறு மீட்டர் உயரத்தில் உள்ளது. [6] மின்மயமாக்கப்பட்ட பாதை கொண்ட இந்த நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. [7] இங்கு பதினான்கு தொடருந்துகள் நிற்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பயணிகள் வண்டிகளாகும். இந்த தொடருந்தி நிலையமானது திருநாவாய நவாமுந்தன் கோயிலில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [8]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads