திருநீலகண்டர் (1972 திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

திருநீலகண்டர் (1972 திரைப்படம்)
Remove ads

திருநீலகண்டர் (Thiruneelakandar) 1972 இல் சி. பி. ஜம்புலிங்கம் இயக்கத்திலும், கே. செல்வராஜ் தயாரிப்பிலும் வெளிவந்த இந்தியத் தமிழ் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். படத்தின் திரைக்கதை, பாடல் வரிகளை கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1] சி. என். பாண்டுரங்கன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் திருநீலகண்ட நாயனார் என்ற கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார். சௌகார் ஜானகி, ஆர். எஸ். மனோகர், எம். பானுமதி, காந்திமதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் திருநீலகண்டர், இயக்கம் ...
Remove ads

கதை

இந்தப் படம் திருநீலகண்டரின் வாழ்க்கைக் கதையை விவரிக்கிறது. முதலில் அஞ்ஞானியாக இருந்த அவர், தான் இயற்றிய பாடல்களைப் பாடி சிவபெருமானின் தீவிர பக்தராக மாறுகிறார். அவர் நீலாவதியை மணந்து குயவுத் தொழ்ழில் செய்து பக்தியுள்ள வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு கட்டத்தில் சிற்றின்ப மோகம் காரணமாக அவர் கலாவதியுடன் உறவை வைத்துக் கொள்கிறார். இதை அறிந்த மனைவி அவருடன் கோபமுற்று இனி தன்னைத் தொடவேண்டாம் என்று என்று கூறிவிடுகிறார். பின்னர் தன் தவறை உணர்ந்த நீலகண்டர் தன் மனைவியையோ அல்லது வேறு எந்தப் பெண்ணையோ இனி தொட மாட்டேன் என்று சிவபெருமான் மீது ஆணையிட்டு சபதம் செய்கிறார். ஒரு துறபோல வாழ்கிறார். காலங்கள் உருள்கின்றன இருவரும் முதுமையடைகின்றனர்.

ஒரு கட்டத்தில் இறைவன் ஒரு வயதான துறவியாக வேடமிட்டு அவரைச் சோதிக்க அவரின் வீட்டுக்கு வருகிறார். முதிய தம்பதியினர் சிவனடியாரை வரவேற்று உபசரிக்கின்றனர். துறவி தன் கையில் உள்ள திருவோட்டைக் காட்டி அபார ஆற்றல் மிக்க இந்த திருவோட்டை உன்னிடம் தருகிறேன். நான் திரும்பி வந்து கேட்கையில் திரும்ப ஓப்படைக்கவண்டும் என்கிறார். திருநீலகண்டர் அதை வாங்கி பத்திரமாக வைக்கிறார். சில காலம் கழித்து துறவி வந்து தன் திருவோட்டைக் கேட்கும்போது திருவோட்டை காணாமல் திருநீலகண்டர் தவிக்கிறார். கோபமுற்ற சிவனடியார் தன் திருவோட்டை திருடிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார். திருநீலகண்டர் தான் திருடவில்லை என்கிறார். அப்படியானால் நீயும் உன் மனைவியும் கையைப் பிடித்தபடி பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்து திருவோட்டை திருடவில்லை என்று சத்தியம் செய்யச் சொல்கிறார். தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள சிக்கலைச் சொல்ல முடியாத திருநீலகண்டர், அதைச் செய்யமுடியாது என்கிறார். இதனால் வழக்கு மன்றத்துக்கு சிவனடியார் செல்கிறார். சிவனடியாருக்கு ஆதரவாக அங்கே தீர்ப்பளிக்கின்றனர். ஒரு வழியில்லாமல் ஒரு கழியின் ஒரு பக்கத்தை திருநீலகண்டரும் மறு பக்கத்தை அவர் மனைவியும் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கி எழுகின்றனர். இறைவனின் அருளால் அவர்கள் முதுமை நீங்கி இளமையைப் பெறுகின்றனர்.

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

சி. என். பாண்டுரங்கன் இசையமைத்த இப்படத்தில் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.

மேலதிகத் தகவல்கள் படல், பாடகர் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads