திருநெல்வேலித் தமிழ்

தமிழ் வட்டார பேச்சுவழக்கு From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருநெல்வேலித் தமிழ் (Tirunelveli Tamil) அல்லது நெல்லைத் தமிழ் (Nellai Tamil), என்பது 'தென்பாண்டிச் சீமை' என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும்.[1][2][3]

மேலதிகத் தகவல்கள் தமிழ், துறை வாரியாகத் தமிழ் ...

தமிழ் மொழி, பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள், இதிகாசங்களில் தகவல்கள் உள்ளன. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும்.[சான்று தேவை] எனவே நெல்லைத் தமிழைத் தமிழ் மொழியின் துவக்கநிலை அமைப்பைக் கொண்டுள்ள தூய தமிழ் வடிவமாக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக சில வார்த்தைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
  • அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
  • நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
  • ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
  • முடுக்குது - நெருக்குகிறது
  • சொல்லுதான் - சொல்கிறான்
  • செய்தான் - செய்கிறான்
Remove ads

நெல்லைத்தமிழ் சொற்கள்

  • அண்டிப் பருப்பு - முந்திரிப் பருப்பு
  • அண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
  • அந்தானிக்கு – அப்பொழுது
  • ஆக்கங்கெட்டது – கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive (a bad omen)
  • ஆக்குப்பாறை-விருந்தின்போது சமையல் செய்யும் இடம்
  • ஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
  • இங்கன – இங்கு
  • இடும்பு – திமிறு (arrogance)
  • ஏல(லே) – நண்பனை அழைப்பது
  • ஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்
  • கசம் – ஆழமான பகுதி
  • களவானி – திருட்டுப்பயல்
  • கிடா – பெரிய ஆடு (male)
  • குறுக்க சாய்த்தல் – படுத்தல்
  • குறுக்கு – முதுகு
  • கூவை – ஆந்தை an owl (bird of bad omen)
  • கொடை – திருவிழா
  • கொட்டாரம் – அரண்மனை
  • கொண்டி – தாழ்ப்பாள்
  • கோட்டி – மனநிலை சரியில்லாதவர்
  • கோதி வை - மொண்டு வை
  • சங்கு – கழுத்து
  • சட்டுவம் - கரண்டி
  • சவுட்டு – குறைந்த
  • சாரம் – லுங்கி
  • சாவி – மணியில்லாத நெல், பதர்
  • சிரிப்பாணி – சிரிப்பு
  • சிரை – தொந்தரவு
  • சீக்கு – நோய்
  • சீனி – சர்க்கரை (Sugar)
  • செத்த நேரம் – கொஞ்ச நேரம்
  • செய்தான் - செய்கிறான்
  • செவி – காது
  • செவிடு – கன்னம்
  • சேக்காளி – நண்பன்
  • சொல்லுதான் – சொல்கிறான்
  • சோலி – வேலை
  • திட்டு – மேடு
  • துஷ்டி – எழவு, சாவு, இறப்பு (funeral)
  • தொரவா – சாவி
  • தொறவா - சாவி
  • நொம்பலம் – தள்ளவும், தள்ளலாம்
  • பாட்டம் – குத்தகை
  • பிளசர் – கார்
  • புரவாட்டி – அப்புறம்
  • பூடம் – பலி பீடம்
  • பைதா – சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
  • பைய – மெதுவாக
  • பொறத்தால – பின்னாலே
  • மக்கா – நண்பா
  • மச்சி – மாடி
  • மண்டை – தலை
  • மாப்பு – மன்னிப்பு
  • முகரை – முகம்
  • முடுக்குது – நெருக்குகிறது
  • மூடு – மரத்து அடி
  • ராத்தல் – ஊர் சுத்துதல்
  • வளவு – முடுக்கு, சந்து
  • வாரியல் – துடைப்பம்
  • வெக்க – சூடு, அனல் காற்று
  • வேக்காடு – வியர்வை, புழுக்கம்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads