தமிழ் வட்டார மொழி வழக்குகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் ஆகும்.

மேலதிகத் தகவல்கள் தமிழ், துறை வாரியாகத் தமிழ் ...

தமிழ்நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும் "கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் சென்னை" வட்டார வழக்குகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

தமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவில் தமிழில் "22" வட்டார வழக்குகள் இருப்பதாக எத்னொலோக் (Ethnologue) என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராசி, பரிகலா, பாட்டு மொழி, இலங்கை தமிழ், மலேசியா தமிழ், பர்மா தமிழ், தென்னாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிசன், சங்கேதி, கெப்பார், போன்றவைகளாகும். கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.

இவ்வட்டார வழக்குகளில் சமூகம், தொழில், பண்பாடு, சாதி, மதம், அந்நிய மொழி சார்ந்து வட்டார வழக்குகள் வேறுபடுகின்றன. தொலைக்காட்சி இணையம் தொடர்பான முன்னேற்றம் காரணமாக புதிய வழக்குகளாக இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த சொற்கள் வட்டார புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச் சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன.

Remove ads

வரலாறு

  • "தொல்காப்பியச் சான்றுகளிலிருந்து இந்நூலசிரியர் 13 தெளிவான பிரதேச மொழிகளை ஒப்புக்கொள்வதாக கருத இடமிருக்கின்றது. இவற்றுள் ஒன்றை அவர் செந்தமிழ் என்று குறிப்பிடுகின்றார். மற்ற 12-ஐக் குறித்து அவர் பொதுவாக "செந்தமிழ் நிலத்தை ஒட்டியிருக்கும் 12 நிலங்களின்" பேச்சு வகைகள் என்று பேசுகின்றார்." [1]
  • தொல்காப்பியத்தில் செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட சொற்களை இயற்சொற்கள் என்றும் 12 மற்ற தமிழ் நிலங்களில் பேசப்படும் சொற்களை திசைச் சொல் என்றும் குறிப்பிடுகின்றார்[1].
Remove ads

வேறுபாடுகள்

ஒலிப்புமுறை

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணப் பகுதிகளில் "இங்கை" என்றும், கன்னியாகுமரி மற்றும் மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது.

சொற்கள்

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள், தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் காணப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது.

தமிழில் வழங்கப்படும் சில சொற்கள் சில வட்டாரங்களுக்கு சொந்தமானவை. எடுத்துக்காட்டுகள்:

  • மதுரை:எல அவிங்க எங்கிட்டு போனாய்ங்க?
  • திருநெல்வேலி:எல அவுக எங்க போனாக?
  • கன்னியாகுமரி:மக்கா அவாள் எங்கடே?
  • சென்னை:ஏய் அவனுவ எங்க போனானுவ?

இப்படியாக ஒலியும் சொற்களும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன.

Remove ads

வகைப்பாடுகள்

தமிழ்நாடு

இலங்கை

சமூகங்கள் வாரியாகப் பேச்சுத் தமிழ்

சாதிசார் அல்லது சமயம் சார் சமூகங்கள் வகையாகவும் சில இடங்களில் பேச்சுத் தமிழ் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது.

பழங்குடி மொழிகள்

ஆய்வுகள்

  • தொல்காப்பியம்
  • கசுட் (1866) - தமிழின் கிளைமொழிகள் பற்றிய ஆய்வு - (ஆங்கில மொழியில்)
  • யூல்சு பிளாக் (1946) - (ஆங்கில மொழியில்)
  • இராம. சுப்பையா - Lexical Study of Tamil Dialects - (ஆங்கில மொழியில்)
  • ரா. பி. சேதுப்பிள்ளை - இலக்கியத் தமிழுமும் பேச்சுத் தமிழும் (Tamil Literary and Colloquial) - (ஆங்கில மொழியில்)
  • கிளைமொழி வரிசையியல் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 12 நூல்கள்
  • கோ. சீமிவாச வர்மா - கிளைமொழியியல்
  • வி. ஐ. சுப்பிரமணியம், ச. அகத்தியலிங்கம், முத்துச்சண்முகம் - நாஞ்சில் நாட்டுத் தமிழ் பற்றிய விரிவான ஆய்வுகள்
  • கருணாகரன், சிவசண்முகம் - Social Dialects of Tamil - (ஆங்கில மொழியில்)
  • சு. சக்திவேல்
  • செ. வை. சண்முகம் - கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் கிளைமொழிகள்
  • கமில் சுவெலபில்
Remove ads

அகராதிகள்

தமிழ்நாடு

இலங்கை

  • மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி
  • இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி - ஈழத்துப் பூராடனார்
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads