திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் (TIRUMANGALAM PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

திருமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருமங்கலத்தில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,038 ஆகும். அதில் ஆண்கள் 53,186; பெண்கள் 51,852 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 22,112 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,032; பெண்கள் 11,080 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 0 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சிகள்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [6]

  1. அம்மாபட்டி
  2. அலப்பலச்சேரி
  3. ஆலம்பட்டி
  4. இராயபாளையம்
  5. உச்சப்பட்டி
  6. உரப்பனூர்
  7. என். காமாட்சிபுரம்
  8. ஏ. கொக்குளம்
  9. கப்பலூர்
  10. கரடிக்கல்
  11. கரிசல்பட்டி
  12. காங்கேயநத்தம்
  13. காண்டை
  14. கிண்ணிமங்கலம்
  15. கிழவனேரி
  16. கீழக்கோட்டை
  17. கே. புளியன்குளம்
  18. சாத்தங்குடி
  19. சீத்தலை
  20. சொரிக்காம்பட்டி
  21. சௌடார்பட்டி
  22. டி. புதுப்பட்டி
  23. தங்களாச்சேரி
  24. திரளி
  25. நடுக்கோட்டை
  26. நடுவக்கோட்டை
  27. பன்னிகுண்டு
  28. புங்கன்குளம்
  29. பொக்காம்பட்டி
  30. பொன்னமங்கலம்
  31. மதிப்பனூர்
  32. மறவன்குளம்
  33. மேலக்கோட்டை
  34. மைக்குடி
  35. வடகரை
  36. வாகைகுளம்
  37. விடாத்தகுளம்
  38. விருசங்குளம்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads