தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு உள்ளாட் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி மன்றங்கள் மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம், பேரூராட்சி மன்றம், மாவட்ட ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி மன்றம் எனும் மன்றங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், நகர்ப்புறம் ...
Remove ads

மாநகராட்சி மன்றம்

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாநகராட்சி மன்றத் தலைவர்களை (மேயர்) 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாநகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் (துணை மேயர்) தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

  • தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சி மன்றங்களும் 820 வார்டுகளும் இருக்கின்றன.
Remove ads

நகராட்சி மன்றம்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது.

இந்த நகராட்சி மன்றத் தலைவர்களை 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் நகர் மன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் நகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார்.

நகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி நகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

  • தமிழ்நாட்டில் 125 நகராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 3,697 நகராட்சி மன்ற உறுப்பினர்களுககான இடங்கள் உள்ளன.
Remove ads

பேரூராட்சி மன்றம்

இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும், கிராம ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில், அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களைப் பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.

இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பேரூராட்சி மன்றத் தலைவர்களை 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர்.

2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார்.

பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

  • தமிழ்நாட்டில் 529 பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.இப்பேரூராட்சிகளில் 8,303 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.

மாவட்ட ஊராட்சி

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி] அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் [கிராம ஊராட்சி]]களை வார்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சிச் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Remove ads

ஊராட்சி ஒன்றியக் குழு

மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி அமைப்புகள் சில சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி வட்டார வளர்ச்சி அலுவலர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் 6,470 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.

Remove ads

கிராம ஊராட்சி மன்றம்

தமிழ்நாட்டில் பேரூராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.

  • தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இந்த ஊராட்சி மன்றங்களில் 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.
Remove ads

உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர் மற்றும் தலைவர் போன்ற பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்களை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

வாக்குப் பதிவுகள்

  • ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் 'ஊராட்சி மன்ற உறுப்பினர்', 'ஊராட்சி மன்றத் தலைவர்', 'ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்' மற்றும் 'மாவட்ட ஊராட்சி உறுப்பினர்' என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.
  • பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள்,'வார்டு உறுப்பினர்' பதவிகளுக்கு மட்டும் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.

வரி மேல் முறையீட்டுக் குழு

வரி மேல் முறையீட்டுக் குழு தலைவர், செயலாளர் மற்றும் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். உள்ளாட்சிப் பகுதியில் வீடு, கடை போன்ற கட்டிடங்களுக்கான சொத்து வரி கூடுதலாக இருக்கிறது என்று கருதும் கட்டிட உரிமையாளர்கள், வரியைக் குறைக்கக் கோரி ஆணையாளர் அல்லது செயல் அலுவலருக்கு அளிக்கும் மனுக்கள் இந்த வரி மேல் முறையீட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். வரி மேல் முறையீட்டுக் குழு அந்த மனுக்களை ஆய்வு செய்து அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட கட்டிடத்திற்கான வரியைக் குறைக்கலாம் அல்லது முன்பு நிர்ணயிக்கப்பட்ட வரி சரியானது என முடிவு செய்யலாம்.

இதையும் பார்க்க

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலதிகத் தகவல்கள் வ.எண், மாநகராட்சி ...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads