திருமதி பழனிச்சாமி

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

திருமதி பழனிச்சாமி
Remove ads

திருமதி பழனிச்சாமி, 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

விரைவான உண்மைகள் திருமதி பழனிச்சாமி, இயக்கம் ...
Remove ads

வகை

சமூகத் திரைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பழனிச்சாமி ஒரு ஆசிரியரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு படிக்காத மனிதர்; அம்சவேணி ஒரு ஆசிரியர் தான். அம்சவேணி பழனிச்சாமியைத் திருமணம் செய்து கொள்ள ஒரு நிபந்தனையுடன் ஒப்புகொள்கிறார். திருமணத்திற்குப் பின் தனது வீட்டில் வாழ பழனிச்சாமி சம்மதித்தால் மட்டுமே திருமணம் என்பதே அது.அந்த நிபந்தனையைப் பழனிச்சாமி ஒப்புக்கொண்டால், அதனால் அவள் வயதான தந்தையைக் கவனித்து கொள்ளலாம். நல்ல பொருத்தம் என ஊர் மெச்ச மணம் புரியும் அவர்களின் ஜோடி, திருமண இரவு வரை மட்டுமே அவ்வாறு எனத் தெரிகிறது. பழனிச்சாமி தங்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்றும் போது, அம்சவேணிக்குக் கோபம் ஏற்படுகிறது. அவர், அம்சவேணியின் தந்தை இல்லாமல், தனது சொந்த ஊரான கிராமத்திற்கு அம்சவேணியை அழைத்துச் செல்கிறார். அவரது மர்மமான நடவடிக்கைகளை என்னவென்று கண்டறியும் வரை கோபப்படும் அம்சவேணி, பின்னால் பழனிச்சாமியின் கோரிக்கைகளை உணர்ந்து அவரது இலட்சியத்தை நிறைவேற்றத் துணை புரிவதாகக் கதை நகர்கிறது.

Remove ads

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி மற்றும் கங்கை அமரன் எழுதியிருந்தனர்.[1][2]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர்(கள்) ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads