திரௌபதியம்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரௌபதியம்மன் (Draupati Amman) சமசுகிருத மகாபாரதத்தில் பல கடவுள்களின் அவதாரம் என விவரிக்கப்படுகிறார்.[1] ஆதி பார்வதத்தில் சாம்பவா பிரிவில் இந்திராணியின் பகுதி அவதாரம் எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இருந்தபோதிலும், வைவாகிகாவில் வியாசர், லட்சுமியாகக் குறிப்பிடுகிறார்.[3] இசுவர்கரோகணிக பார்வதத்தில், யுதிஸ்டர் சொர்க்கத்தில் திரௌபதி இலட்சுமியாக இருந்தபோது பார்த்ததாக நம்பப்படுகிறது.[4]
இவரை நாட்டுப்புறத் தெய்வமாகக் கருதப்படுகிறார்.விழாக்காலங்களில் தீ மிதித்தல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.[5] பெங்களூர் கரகா திருவிழாவின் ஒன்பதாம் நாள் விழாவில் திரௌபதி அம்மன் ஆதிசக்தி மற்றும் பார்வதி ஆகியோரின் அவதாரமாக வணங்கப்படுகிறார்.[6]
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கருநாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 400 கோயில்கள் உள்ளன.[7] திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைப் பாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. மற்றும் ஈழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே திரௌபதியம்மனுக்கு பெரும்பாலான ஆலயங்கள் காணப்படுகின்றன. இவற்றில் வருடாந்த திருச்சடங்கு இடம்பெறும் (ஆகமம் சாராத)ஆலயங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பாண்டவர்கள் கொலுவிருந்து விரதம் ஏற்று பாண்டவர்கள் வனவாசம் புகுதலும் அருச்சுணர் தவநிலை ஏறுதலும் தீமிதித்தல் இடம்பெற்று தீப்பள்ளய சடங்குடன் இனிதே நிறைவு பெறும்.

Remove ads
கோயில்கள்
- சங்கொலிகுப்பம் திரெளபதி கடலூர்
- பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோயில், இலங்கை
- மட்டிக்களி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம், மட்டக்களப்பு, இலங்கை.
மட்டிக்களி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம், மட்டக்களப்பு, - புதூர் திரௌபதியம்மன் ஆலயம் மட்டக்களப்பு, இலங்கை.
- திருபழுகாமம் திரௌபதியம்மன் ஆலயம் மட்டக்களப்பு, இலங்கை.
- மகிழவட்டுவான் திரௌபதியம்மன் ஆலயம் மட்டக்களப்பு, இலங்கை.
- புராணசிங்கபாளையம் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம்
- கிளாப்பாக்கம் திரௌபதியம்மன் கோவில், விழுப்புரம் மாவட்டம்.
- பண்பொழி திரௌபதி அம்மன் கோயில்
- சேந்தநாடு திரௌபதியம்மன் கோயில், உளுந்தூர்பேட்டை [8]
- கடம்பூர் திரௌபதியம்மன் கோயில்
- சத்தியவாடி திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- சோரப்பட்டு திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- சிறுகிராமம் திரௌபதி அம்மன் கோயில், கடலூர் மாவட்டம்
- பாஞ்சாலிபுரம் திரௌபதி அம்மன் கோயில், மட்டக்களப்பு[9]
- ஸ்ரீ தர்மராஜர் உடனுறை ஸ்ரீ திரௌபதியம்மன் கோயில், பிள்ளைச்சாவடி, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா 605014
- மடப்பட்டு திரௌபதியம்மன் கோயில், உளுந்தூர்பேட்டை [10]
- மோகனூர் திரௌபதியம்மன் கோயில், நாமக்கல்
- நரங்கியன்பட்டி திரௌபதியம்மன் கோயில்
- பொணீய கொழப்பலுசிர் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- ரங்கராஷபுரம் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- சித்தருகாவூர்புதுசிர் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- சின்னசேலம் திரௌபதியம்மன் கோயில், சின்னசேலம் வட்டம்.
- நல்லான்பிள்ளை பெற்றான் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- கொணலூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- மாத்தூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- துத்திப்பட்டி திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
ஸ்ரீ திரௌபதாதேவி - மட்டிக்கழி - கடம்பூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- இரட்டணை திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- திரௌபாதி அம்மன் கோவில் ,சொட்டையன் தெரு ,சூரமங்கலம் ,சேலம்
Remove ads
காட்சியகம்
- வில்லை கையில் வைத்திருக்கும் திரௌபதியம்மன்
- திருவடி தரிசனம்
- திரௌபதியின் தலை
- அன்னையின் முழுவடிவ தரிசனம்
அன்னையின் திருவுருவ படங்கள்

ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads