திலக் வர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நம்பூரி தாகூர் திலக் வர்மா (பிறப்பு 8 நவம்பர் 2002) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் . இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியதற்காக பரவலாக அறியப்பட்டவர்.[1][2] அவர் 30 டிசம்பர் 2018 அன்று 2018-19 ரஞ்சிக் கோப்பையில் ஐதராபாத் அணிக்காக முதல் தர துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[3] அவர் 28 பிப்ரவரி 2019 அன்று 2018-19 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் [4] 2019-20 விஜய் ஹசாரே கோப்பையில் ஐதராபாத் அணிக்காக 28 செப்டம்பர் 2019 அன்று பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[5]
2019 டிசம்பரில், 2020 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.[6] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்டார்.[7][8]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
திலக் வர்மா 8 நவம்பர் 2002 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். அவரது தந்தை நாகராஜு வர்மா மின்தொழுல்நுட்பவியலாளராகப் பணிபுரிந்தார், மேலும் அவரது தாயார் காயத்ரி தேவி இல்லத்தரசி. அவருக்கு தருண் வர்மா என்ற அண்ணன் உள்ளார். திலக் சிறுவயதிலேயே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தெலுங்கானாவில் உள்ள லீகலா துடுப்பாட்டப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறச் சேர்ந்துகொண்டார். அங்கு, அவருக்கு சலாம் பயஷ் வழிகாட்டியாக இருந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை ஹைதராபாத்தில் உள்ள கிரசண்ட் மாடல் ஆங்கிலப் பள்ளியில் தொடங்கினார்.
Remove ads
உள்ளூர்ப் போட்டிகள்
திலக் 2018-19 ரஞ்சிக் கோப்பையில் 30 டிசம்பர் 2018 இல் தனது முதல் தர அறிமுகப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அவரது முதல் போட்டி ஆந்திராவுக்கு எதிரானது. தொடரில், திலக் ஏழு போட்டிகளில் 215 ஓட்டங்கள் எடுத்தார். அவர் 28 பிப்ரவரி 2019 அன்று 2018-19 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக தனது இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். அவர் நான்கு முதல்தர போட்டிகளிலும், பதினாறு பட்டியல் அ போட்டிகளிலும், பதினைந்து T20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். விஜய் ஹசாரே கிண்ண 2021-22 தொடரில், அவர் ஐந்து ஆட்டங்களில் 180 ஓட்டங்கள் குவித்து நான்கு இலக்குகளை வீழ்த்தினார். செப்டம்பர் 28, 2018 அன்று, 2019-20 விஜய் ஹசாரே கிண்ணப் போட்டித் தொடரில் ஹைதராபாத் அணிக்காக பட்டியல் அ அணியில் அறிமுகமானார். டிசம்பர் 2019 இல், திலக் 2020 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அவர் தொடரில் 6 ஆட்டங்களில் விளையாடி 86 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தின் போது, அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துடன் ஏலத்திற்கு வந்து மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 1.7 கோடிக்கு வாங்கப்பட்டார். லீக்கின் இரண்டாவது ஆட்டத்தில், நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் அரங்கில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக திலக் 33 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தார். ஏப்ரல் 2023 இல், திலக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 84*(46) ஓட்டங்கள் எடுத்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads