தீயா வேலை செய்யணும் குமாரு

சுந்தர் சி. இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

தீயா வேலை செய்யணும் குமாரு
Remove ads

தீயா வேலை செய்யணும் குமாரு 2013ல் வெளிவந்த காதலும் நகைச்சுவையும் கலந்து சுந்தர்.சி துணை தயாரிப்பில் இயக்கியுள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி,கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானம் [2] ஆகியோர் நடித்துள்ள திரைப்படம். இதன் தெலுங்கு பதிப்பான சம்திங் சம்திங் ல் சந்தானத்திற்கு பதிலாக பிரம்மானந்தம் நடித்து ஒரே சமயத்தில் வெளிவந்தது. 2013 ஜனவரி மாதம் இதன் படபிடிப்பு ஆரம்பிக்கப் பட்டது[3][4]. சூன் 14ம் தேதி 2013 ஆண்டு வெளியான இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றது[5][6] .

விரைவான உண்மைகள் தீயா வேலை செய்யனும் குமாரு, இயக்கம் ...
Remove ads

கதை சுருக்கம்

குமார் (சித்தார்த்) கூட்டு குடும்பத்தில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். எனினும் இவருக்கு மட்டும் குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரை பெண்களும், காதலும் மோசமான அனுபவத்தையே தருகின்றன. ஒருநாள் தன் அலுவலகத்தில் புதியதாக வேலைக்கு சேரும் சஞ்சனா (ஹன்சிகா மோத்வானி)வுடன் காதல் வயப்படுகிறார். தன் காதலை வெளிப்படுத்த தெரியாத காரணத்தினால், காதலர்களை ஈர்க்க உதவுவதன் மூலம் காசு சம்பாதிக்கும் மோகியா (சந்தானம்) வின் உதவியை நாடுகிறார். பெண்களிடம் உறுதியாக பேசுவதற்கு மோகியா அவருக்கு வகுப்பெடுக்கிறார். அவர் குமாரிடம் சஞ்சனா தன் பணி முதல்வரான ஜார்ஜ்யை (கணேஷ் வெங்கட்ராமன்) காதலிப்பதாக வதந்தியை பரப்ப சொல்கிறார். இதன் முடிவாக, ஜார்ஜுடன் நேரம் செலவழிப்பதை சஞ்சனா நிறுத்துகிறார். இதனை தன் தோழி மூலம் தெரிந்து கொண்ட ஜார்ஜ், குமார் தன் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருவாயில் இவரும் தன் காதலை சஞ்சனாவிடம் வெளிபடுத்துகிறார். அவரும் ஒத்துக்கொள்ள, குமாரின் இதயம் நொறுங்குகிறது. பிறகு ஜார்ஜ், சஞ்சனா காதலை பிரிப்பதற்காக மோகியா களம் இறங்குகிறார். குமாரும் சஞ்சனாவும் காதலிக்க தொடங்கும் வேளையில் மோகியாவின் தங்கைதான் சஞ்சனா என தெரிய வர, இவர்கள் காதலையும் குமாரை வைத்தே பிரிக்க முயல்கிறார். குமார் சஞ்சனாவிடம் அனுதாபம் மூலம் மன்னிப்பை பெற முயல்கிறார். கடைசியில் குமாருடைய உண்மையான காதலை புரிந்து கொண்ட சஞ்சனா மோகியா ஆசியுடன் இணைகின்றனர்.

Remove ads

நடிகர்கள்

Remove ads

தயாரிப்பு

கலகலப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யூடி.வி மோஷன் பிக்‌ஷர்ஸுடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிப்பதாக சுந்தர்.சி அறிவித்தார். சித்தார்த் மற்றும் ஹன்சிகா நடித்து தெலுங்கில் வெற்றிப் படமான ஓ மை ஃபிரண்ட் தொடர்ந்து இதிலும் ஜோடியாக நடித்தனர். இப்படத்தின் தலைப்பு புதுப்பேட்டை படத்தி்ல் புகழ்பெற்ற வசனமான தீயா வேல செய்யணும் குமாரு வில் இருந்து எடுக்கப்பட்டது, இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் சந்தானத்திற்கு பதிலாக பிரம்மானந்தம் நடிக்க சம்திங் சம்திங் என்ற பெயரில் உருவானது. சந்தானத்திற்கு சுந்தர்.சி யுடன் இது மூன்றாவது படம்.

பாடல்கள்

சி.சத்யா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆறு பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார்.

மேலதிகத் தகவல்கள் Tracklist, # ...
Remove ads

வெளியிடு

விஜய் தொலைக்காட்சி இதன் செயற்கைகோள் உரிமையை வாங்கியுள்ளது. இந்திய தணிக்கை குழு[9] இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் 14 ஜீன் 2013 அன்று தில்லுமுல்லு திரைப்படத்துடன் வெளியானது. தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படம் தமிழ்நாட்டில் 460 திரையரங்குகளிலும், வெளிநாட்டு சந்தையான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் 80 திரையரங்கிலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 60 திரையரங்கிலும் வெளியானது.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads