துத்தநாக நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துத்தநாக நைட்ரேட்டு (Zinc nitrate) என்பது Zn(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்திலுள்ள இப்படிகத் திண்மம் ஈரமுறிஞ்சியாகவும் அறுநீரேற்றாகவும் (Zn(NO3)2•6H2O) காணப்படுகிறது. ஆல்ககால் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் இது கரைகின்றது.
Remove ads
தயாரிப்பு மற்றும் வினைகள்
பொதுவாக துத்தநாகத்தை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து துத்தநாக நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வினை நைட்ரிக் அமிலத்தின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டது ஆகும். அடர் அமிலத்தைப் பயன்படுத்தினால் அமோனியம் நைட்ரேட்டு உருவாகிறது.
- Zn + 2 HNO3 (நீர்த்த அமிலம்) → Zn(NO3)2 + H2
- 4 Zn + 10 HNO3 (அடர் அமிலம்) → 4 Zn(NO3)2 + NH4NO3 + 3 H2O
சூடுபடுத்தும் பொழுது, துத்தநாக நைட்ரேட்டு வெப்பசிதைவுக்கு உட்பட்டு துத்தநாக ஆக்சைடு, நைட்ரசன் ஈராக்சைடு மற்றும் ஆக்சிசன் முதலியனவாகச் சிதைகிறது.
2 Zn(NO3)2 → 2 ZnO + 4 NO2 + O2
Remove ads
பயன்கள்
பெருமளவு அடிப்படையிலான பயன்கள் ஏதுமில்லை எனினும் துத்தநாக நைட்ரேட்டு ஆய்வகங்களில் ஒருங்கிணைப்புப் பல்லுறுப்பிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது[1]. கட்டுப்படுத்தப்பட்ட சிதைவு மூலம் தயாரிக்கப்படும் துத்தநாக ஆக்சைடு , மீநுண் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு துத்தநாக ஆக்சைடுகள் அடிப்படையிலான அமைப்புகள் தயாரிக்கப் பயன்படுகின்றன[2]
சாயப் பொருட்களில் நிறம் நிறுத்தியாகவும் துத்தநாக நைட்ரேட்டைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக துத்தநாக கார்பனேட்டு வீழ்படிவாகக் கிடைக்கும் பின்வரும் வினையைக் குறிப்பிடலாம்.
- Zn(NO3)2 + Na2CO3 → ZnCO3 + 2 NaNO3.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads