காட்மியம் நைட்ரேட்டு

From Wikipedia, the free encyclopedia

காட்மியம் நைட்ரேட்டு
Remove ads

காட்மியம் நைட்ரேட்டு (Cadmium nitrate ) என்பது Cd(NO3)2.xH2O. என்ற பொது வாய்ப்பாடுடன் உள்ள மூலக்கூற்று அமைப்பில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.நீரிலி வகை காட்மியம் நைட்ரேட்டு துரிதமாக ஆவியாகும் தன்மையுடனும் பிற நைட்ரேட்டுகள் உப்புகளாகவும் உள்ளன. அனைத்து வகை காட்மியம் நைட்ரேட்டு உப்புகளும் நிறமற்ற படிகத் திண்மங்களாகவும் , காற்றில் இருந்து நீரை உறிஞ்சுகின்றவையாகவும் காணப்படுகின்றன. இதனால் அவை ஈரமான நீர் உறிஞ்சும் சேர்மங்களாக தோன்றுகின்றன. காட்மியம் சேர்மங்கள் புற்றுநோயாக்க வேதிப்பொருட்களாக உள்ளன.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

பயன்கள்

கண்ணாடிகள் மற்றும் பீங்கான் போன்ற பொருட்களுக்கு வண்ணமூட்டவும்[7] ஒளிப்படவியலில் எரியும் தூளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

காட்மியம் உலோகம் அல்லது காட்மியம் ஆக்சைடு,காட்மியம் ஐதராக்சைடு அல்லது காட்மியம் கார்பனேட்டுகளில் ஒன்றை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து காட்மியம் நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது.

CdO + 2HNO3 → Cd(NO3)2 + H2O
CdCO3 + 2 HNO3 → Cd(NO3)2 + CO2 + H2O
Cd + 4 HNO3 → 2 NO2 + 2 H2O + Cd(NO3)2

வினைகள்

உயர் வெப்பநிலைகளில் காட்மியம் நைட்ரேட்டு , காட்மியம் ஆக்சைடு மற்றும் நைட்ரசனின் ஆக்சைடுகளை உருவாக்குகிறது. அமிலம் சேர்க்கப்பட்ட காட்மியம் நைட்ரேட்டுக் கரைசலில் ஐதரசன் சல்பைடைச் செலுத்தும் போது மஞ்சள் நிறக் காட்மியம் சல்பைடு உருவாகிறது. கொதிநிலை நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்ட வினையில் சிவப்பு நிறச் சல்பைடாக இது மாற்றமடைகிறது. எரிசோடாக் கரைசலுடன் சேரும்போது , காட்மியம் ஆக்சைடு காட்மியம் ஐதராக்சைடாக வீழ்படிவாகிறது. கரையாத காட்மியம் உப்புகளை இவ்வீழ்படிவாக்கல் முறையில் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads