துமாசிக் விருது

சிங்கப்பூரின் இரண்டாவது மதிப்புமிக்க தேசிய விருது From Wikipedia, the free encyclopedia

Remove ads

துமாசிக் விருது (ஆங்கிலம்: Order of Temasek; மலாய்: Darjah Utama Temasek); என்பது சிங்கப்பூரின் இரண்டாவது மதிப்புமிக்க தேசிய விருது ஆகும். 1962-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் துமாசிக் விருது Order of Temasek, விருது வழங்குவதற்கான காரணம் ...

சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டும் சிங்கப்பூர் அதிபரால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருது. சில சிறப்புச் சூழ்நிலைகளில், குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படலாம்.[1]

Remove ads

பொது

2019 ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி, துமாசிக் விருது மூன்று வெவ்வேறு தரங்களைக் கொண்டுள்ளது:[2]

  • துமாசிக் விருது (உயர் சிறப்பு) - Order of Temasek (High Distinction)
  • துமாசிக் விருது (சிறப்பு) - Order of Temasek (Distinction)
  • துமாசிக் விருது

வரலாறு

எந்த ஒரு நேரத்திலும் 12 பேருக்கு மேல், உயர் சிறப்பு துமாசிக் விருது பெறுவது அனுமதிக்கப் படக்கூடாது என்று விருது விதிகள் கூறுகின்றன. ஆனால் சில சிறப்புச் சூழ்நிலைகளில், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உயர் சிறப்பு துமாசிக் விருதுகளுக்கு வரையறை இல்லை.

2020-ஆம் ஆண்டு ஆகஸ்டு நிலவரப்படி, உயர் சிறப்பு துமாசிக் விருது (Order of Temasek (With High Distinction) பெற்றவர்கள் 8 பேர் உள்ளனர். மற்ற துமாசிக் சிறப்பு விருது; துமாசிக் விருது; ஆகிய இரண்டு விருதுகள் பெற்றவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.[1][3]

இந்த விருது, முதன்முதலில் 1962-இல் தோற்றுவிக்கப்பட்டது. இது மிக முக்கியமான ஒரு தேசியக் கௌரவமாகும். விருது பெற்றவர்களின் பட்டியலில் பன்னிரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

பிந்தாங் துமாசிக்

சிங்கப்பூர் பிரதமரின் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூர் யாங் டி பெர்துவான் நெகாரா எனும் சிங்கப்பூர் அதிபர் இந்த விருதை வழங்குகிறார்.[4]

பிந்தாங் துமாசிக் (துமாசிக்கின் நட்சத்திரம்) எனும் விருது, (ஆங்கிலம்: Star of Temasek; மலாய்: Bintang Temasek) 1970-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் மற்ற அனைத்து விருதுகள்; பதக்கங்களின் தரவரிசையில், துமாசிக் விருது இரண்டாவது மிக முக்கியமான தேசிய விருதாக மாறியது.[5]

Remove ads

விருது பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads