துவாரான் மாவட்டம்

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

துவாரான் மாவட்டம்map
Remove ads

துவாரான் மாவட்டம்; (மலாய்: Daerah Tuaran; ஆங்கிலம்: Tuaran District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் துவாரான் நகரம் (Tuaran Town).[1]

விரைவான உண்மைகள் துவாரான் மாவட்டம், நாடு ...

சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் துவாரான் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]

Remove ads

பொது

Thumb
துவாரான் மாவட்ட வரைபடம்

சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

வரலாறு

துவாரான் என்ற பெயரின் தோற்றம் ஓரளவுக்கு இன்னும் அறியப் படாமல் உள்ளது. இருப்பினும் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பே இருந்து துவாரான் நகரில் ஒரு குடியேற்றம் இருந்துள்ளது. 1800-ஆம் ஆண்டுகளில் இசுடாம்போர்டு இராஃபிள்சு துவாரான் எனும் பெயரைப் பயன்படுத்தி உள்ளார்.

இசுடாம்போர்டு இராஃபிள்சு (Stamford Raffles), 1811–ஆம் ஆண்டில் இருந்து 1815-ஆம் ஆண்டு வரை டச்சு கிழக்கிந்திய நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்தார். 1813–ஆம் ஆண்டில் ஜாவாவின் ஆளுநராகவும் இருந்தார்.[3][4]

இசுடாம்போர்டு இராபிள்சு

அந்தக் காலக் கட்டத்தில் துவாரான், தெம்பாசு (Tempasuk) பகுதிகள் கடல் கொள்ளைகளால் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்தக் கடல் கொள்ளைகளை ஒடுக்குமாறு இசுடாம்போர்டு இராபிள்சை புரூணை சுல்தான் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் இருந்த பிரித்தானிய (East India Company) செயலாளருக்கு இசுடாம்போர்டு இராஃபிள்சு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில் துவாரான் எனும் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Remove ads

நிர்வாகப் பிரிவு

Thumb
துவாரான் மாவட்டத்தின் முக்கிம்கள்
மேலதிகத் தகவல்கள் துவாரான் மாவட்டம், இடம் ...

காட்சியகம்

மேற்கோள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

மேலும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads