தூத்துக்குடி மாநகராட்சி

இந்தியாவின் தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia

தூத்துக்குடி மாநகராட்சி
Remove ads

தூத்துக்குடி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தூத்துக்குடியை நிர்வகிக்கும் அமைப்பகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மாநகராட்சியாகும். தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அத்திமரப்பட்டி, குமரகிரி, மாப்பிள்ளை ஊரணி, மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் சங்கரப்பேரி ஆகிய பகுதிகளைக் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஆகும். தூத்துக்குடி சிறப்புநிலை நகராட்சியாக இருந்த இதை, 05 ஆகஸ்டு 2008 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 60 வார்டுகள் கொண்டது.

விரைவான உண்மைகள் தூத்துக்குடி மாநகராட்சி, வகை ...

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் சிறப்புமிக்க மாநகராட்சியாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆறாவது படி நிலையில் உள்ள மாநகராட்சியாகும். இங்குள்ள மூன்று முக்கியச் சாலைகள் மதுரையும், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியை இணைக்கின்றது.

மேலதிகத் தகவல்கள் பரப்பளவு, மக்கள் தொகை ...

மாநகராட்சி அலுவலகம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் மேற்கு கிரேட் காட்டன் சாலையில் அமைந்துள்ளது.

Remove ads

தூத்துக்குடி மாநகராட்சி

மேலதிகத் தகவல்கள் ஆணையர், மேயர் ...

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.47 ச.கி.மீ. பரப்பும், 51 மாமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 4,11,628 ஆகும். அதில் 2,05,958 ஆண்களும், 2,05,670 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.மக்கள்தொகையில் இந்துக்கள் 64.97 %, இசுலாமியர்கள் 4.74 %, கிறித்தவர்கள் 30.14 % மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]

Remove ads

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022

2022-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 50 வார்டுகளையும், அதிமுக 6 வார்டுகளையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல்களில் திமுகவின் என். பி. ஜெகன் மற்றும் ஜெனிட்டா செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.[2]

மேயர்கள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads