தெங்குமரஹாடா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெங்குமரஹடா, (Thengumarahada), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள தெங்குமரஹாடா ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்கு மாயாறு பாய்கிறது.
Remove ads
அமைவிடம்
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காப்புக் காட்டில் அமைந்த முதுமலை தேசியப் பூங்கா பரப்பில் தெங்குமரஹடா கிராமம் உள்ளது. இக்கிராமம் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி வட்டத்தில் அமைந்திருப்பினும், கொடநாட்டிலிருந்து மலைக்காடுகள் வழியாக, மூன்றரை மணி நேரம் நடந்து, 10 கி.மீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை அடையலாம். தெங்குமரஹாடாவிலிருந்து கொடநாடு செல்ல அடிப்படை சாலை வசதிகள் இல்லை.
ஈரோடு மாவட்டத்தின், பவானிசாகருக்கு வடமேற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ள தெங்குமரஹாடாவிற்கு செல்ல கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் மட்டும் உள்ளன.
Remove ads
மலையேற்றம்
தெங்குமரஹாடா பகுதிக்கு மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் உதகமண்டலம் வடக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதிபெற வேண்டும். வனத்துறை வழிகாட்டிகள் மூலம் மட்டும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள முடியும். தெங்குமரஹாடாவில் உள்ள வனத்துறை அலுவலவகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கிக்கொள்ள முன் அனுமதி பெறவேண்டும்.[3]
பின்னணி
மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, உணவு உற்பத்தி மாதிரி கிராமங்களை உருவாக்கினார். இதில் தெங்குமரஹாடா கிராமமும் ஒன்று. நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டத்தை சேர்ந்த 142 விவசாயிகளுக்கு தெங்குமரஹாடாவில் 500 ஏக்கர் நிலம் வழங்கி விவசாயம் செய்ய வழி வகை செய்யப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் தலா 2 ஏக்கர் நஞ்சை மற்றும் ஓர் ஏக்கர் புஞ்சை நிலம் வழங்கப்பட்டது. இந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி செய்ய கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியில் உள்ளவர்களை பணியமர்த்தினர். விவசாயத்துக்கான நிலம் மற்றும் தண்ணீர் வசதி இருந்ததால் நாளடைவில் தெங்குமரஹாடா செழிப்பான பூமியாக மாறியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கம் 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கம் மூலம் விளைபொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
மக்கள் பிரச்சனைகள்
இக்கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக இங்கு பாயும் மோயாறு நீர்வளத்தைக் கொண்டு வேளாண்மை செய்து வாழ்கின்றனர். சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் நிறுவப்பட்டதற்குப் பின், தெங்குமரஹாடா கிராம மக்கள், 38 கி.மீ. கிழக்கில் உள்ள சத்தியமங்கலத்தில் உள்ள கல்விநிலையம், சந்தை மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு, நல்ல சாலை வசதி இன்மையால் பெருந்துயர் கொள்கின்றனர்.
வெளியிணைப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads