தென்னாபிரிக்க ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னாபிரிக்க ஒன்றியம் (Union of South Africa) என்பது தற்போதைய தென்னாபிரிக்கக் குடியரசின் முன்னாளைய அமைப்பாகும். இவ்வொன்றியம் மே 31, 1910 இல் முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளாயிருந்த கேப், நட்டால், டிரான்ஸ்வால், ஒரேஞ்சு தனி மாநிலம் ஆகியவற்றை இணைத்து இவ்வொன்றியத்தின் மாகாணங்களாக உருவாக்கப்பட்டது.[1][2][3]
இது முதலில் ஒரு தன்னாட்சி உரிமையுள்ள நாடாக (dominion) அமைக்கப்பட்டு பின்னர் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது. இவ்வொன்றியம் மே 31, 1961 இல் கலைக்கப்பட்டு தென்னாபிரிக்கக் குடியரசு என்ற பெயரில் குடியரசானது.
Remove ads
கனடா, அவுஸ்திரேலியா போன்ற கூட்டமைப்புகள் போலல்லாமல் தென்னாபிரிக்க ஒன்றியம் ஒரு தனிநாடாக விளங்கியது. நான்கு குடியேற்ற நாடுகளினதும் நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட்டு அவை மாகாண அமைப்பாக மாற்றப்பட்டன. அசெம்பிளி, செனட் என இரு அவைகள் அமைக்கப்பட்டன. இவற்றின் உறுப்பினர்களை பொதுவாக நாட்டின் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையினத்தவர்களே தெரிவு செய்தனர்.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads