தெமாங்கோங்
ஜாவானிய, மலாய் இராச்சியங்களில் ஒரு பிரபு பதவியைக் குறிக்கும் சொல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெமாங்கோங் அல்லது தெமெங்குங், ஆங்கிலம்: Tumenggung அல்லது Temenggong; மலாய் மொழி: Temenggung; ஜாவி: تمڠݢوڠ; சாவகம்: ꦠꦸꦩꦼꦁꦒꦸꦁ; Tumenggung); என்பது பாரம்பரிய ஜாவானிய, மலாய் இராச்சியங்களில் ஒரு பிரபு பதவியைக் (Title of Nobility) குறிக்கும் சொல் ஆகும். மலாக்கா சுல்தானகத்தில் தெமாங்கோங் பதவி ஓர் உயர்ந்த பதவியாகும்.[1]
ஒரு சுல்தானகத்தில் ஒரு சுல்தானின் பாதுகாப்பு படையின் தலைவருக்கான இந்தப் பதவி, சுல்தானின் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதாவது தெமாங்கோங் என்பது ஒரு சுல்தானகத்தின் காவல்துறை மற்றும் இராணுவத்தை மேற்பார்வையிடும் பொறுப்புள்ள பதவி.[2]
Remove ads
பொது
மலாக்காவின் முதல் மன்னரான பரமேசுவராவின் ஆட்சிக் காலத்தில் தெமாங்கோங் பதவி உருவாக்கப் பட்டது. அப்போது மலாக்கா சுல்தானகத்தின் (Sultanate of Melaka) வாரிசாக இருந்தவருக்கு தெமாங்கோங் பதவி வழங்கப்பட்டது. இந்தத் தெமாங்கோங் பதவி, பின்னர் ஜொகூர் சுல்தானகத்தின் காலத்திலும் தொடர்ந்தது.[3]
ஒரு தெமாங்கோங் பதவி ஒரு சுல்தானால் நியமிக்கப்படும் பதவி. ஓர் இராச்சியத்தின் அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள பிரதேசங்களின் ஆட்சியாளராக ஒரு தெமாங்கோங் நியமிக்கப்படலாம். அந்தப் பிரதேசங்களில் அவர் ஒரு துணை ஆளுநராக செயல்படுவார். புரூணை சுல்தானகத்தில் தெமாங்கோங் பதவியை வாசீர் (Wazir) என்று அழைத்தார்கள்.[4]
ஜொகூர்
ஜொகூர் சுல்தானகத்தில், தெமாங்கோங் மூவார் (Temenggong of Muar) என்பவர், ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக சிகாமட் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
இருப்பினும் தெமாங்கோங் ஜொகூர் (Temenggong of Johor) என்பவர் ஒட்டுமொத்த ஜொகூர் மாநிலத்திற்கும் தலைவராக இருந்தார். இவர் தெமாங்கோங் செரி மகாராஜா (Temenggung Seri Maharaja) என்று அழைக்கப்பட்டார்.
தெமாங்கோங் அபு பக்கார்
தெமாங்கோங் மூவார் என்பவர் மூவார், சிகாமட் பகுதிகளுக்குத் தலைவராக இருந்த போதும் அவர் ஜொகூர் தெமாங்கோங்கின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தார். 1868-இல், தெமாங்கோங் ஜொகூராக இருந்தவர் தெமாங்கோங் அபு பக்கார் (Temenggong Abu Bakar).
இவர் தன்னை ஒரு மகாராஜாவாக அறிவித்ததுக் கொண்டு, ஜொகூர் மாநிலத்தின் கட்டுப்பாட்டையும் ஏற்றுக் கொண்டார். 1885-இல், தன்னை ஒரு சுதந்திர ஆட்சியாளராக அறிவித்து, சுல்தான் எனும் பட்டத்தையும் ஏற்றுக் கொண்டார்.
Remove ads
மலேசியாவில் தற்போதைய பயன்பாடு
தற்போது மலேசியாவில் மலாய் ஆட்சியாளர்களின் மாநிலங்களிலும் தெமாங்கோங் எனும் பதவி செயல்படுத்தப் படுகிறது. அதன் விவரங்கள்:
Remove ads
மேற்கோள்கள்
துணை நூல்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads