தெய்வ வாக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெய்வ வாக்கு (Deiva Vaakku) 1992 இல் வெளிவந்த இந்திய தமிழ்த்திரைப்படம் ஆகும். இப்படத்தை எம். எஸ். மாது இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை டி. சிவா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் 1992 செப்டம்பர் மாதம் 11 அன்று வெளியானது. இப்படம் சராசரி லாபத்தையே ஈட்டியது.[1][2] தெலுங்கு மொழியில் "சங்கீர்த்தனா" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு 1997 ல் வெளிவந்தது.
Remove ads
கதைச் சுருக்கம்
அம்சவேணி (ரேவதி (நடிகை)) குழந்தைப்பருவம் முதலே தேவியின் அருள் வாக்கினை சொல்லி வருபவராக இருக்கிறார். அதனால் அந்த கிராமமே அவரை மிகவும் மரியாதையாகவும் நன்றியுடனும் பார்க்கிறது. ஒரு சமயம் கிராமத்தில் ஏற்பட்ட கடும் வறட்சிக்குப் அம்சவேணியின் அருள் வாக்கு அருள்கிறார். பின்னர் தேவியின் அருளால் மழை பொழிகிறது. அவருடைய சகோதரன் என்று சொல்லிக் கொண்டு அக்கிரமத்தில் வசித்து வரும் வல்லத்தார் (விஜயகுமார்) தனது தங்கையின் சக்திகளைப் பயன்படுத்தி தன்னைப் பணக்காரக்கிக் கொள்கிறார். அக்கிராமத்தில் தம்பித்துரை (கார்த்திக்) என்பவன் வசித்து வருகிறான். அவன் குடிகாரனாக இருந்தாலும் அவனது எண்ணம் மிகவும் மேன்மையானதாக இருக்கிறது. இவன் மீது அம்சவேணிக்கு காதல் உண்டாகின்றது. அம்சவேணி சாதாரன வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ள தம்பித்துரையை வற்புறுத்துகிறாள்.
இதனை அறிந்த வல்லத்தார் அம்சவேணியின் முடிவில் அதிருப்தி அடைகிறார். அவர்கள் இருவருக்கும் இடையேயான வசதி வாய்ப்புகளைக் கொண்டும் இத்திருமணத்தை மறுக்கிறார். மேலும், அம்சவேணியின் அருள் வாக்கினால் தனக்கு வரும் பணம் வராமல் நின்று போய் விடும் என்பதாலும் அவர்கள் இருவரும் இணைவதை எதிர்க்கிறார். எனவே தம்பித்துரை தனது சகோதரியை திருமணம் செய்வதிலிருந்து பல்வேறு வழிகளில் தடுக்க முயற்சிக்கிறார். கடைசியில் வல்லத்தார் அவரது முயற்சியில் வென்றாரா? அல்லது தம்பித்துரை மற்றும் அம்சவேணி வாழ்வில் இணைந்தனரா? என்பது மீதிக்கதையாகும்.
Remove ads
நடிகர்கள்
- கார்த்திக் - தம்பிதுரை
- ரேவதி - அம்சவேணி / ஆத்தா
- விஜயகுமார் - வல்லத்தார்
- ஸ்ரீவித்யா - வல்லத்தார் மனைவி
- ராதாரவி - வீரையன்
- செந்தில் - தம்பிதுரை நண்பர்
- யுவஸ்ரீ - தம்பித்துரையின் தாயார்
- பிருந்தா
- பேபி சாதனா
- பேபி சாஜனா
- பாண்டு
- வடிவேல் - கருவாடு தம்பிதுரை நண்பர்
- ஏ. கே. வீராசாமி - சாமியாடி
- கிருஷ்ணமூர்த்தி
- சிங்கமுத்து
ஒலிப்பதிவு
இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இதன் இசை 1992 இல் வெளியானது. ஐந்து பாடல்கள் கொண்ட இதன் பாடல்களை வாலி, கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3] இப்படத்தில் இடம் பெற்ற "வள்ளி வள்ளி என வந்தாள்" என்ற பாடல் சிவரஞ்சனி இராகத்தை அடிப்படையாகக் கொண்டு இசைக்கப்பட்டிருந்தது.[4]
விமர்சனம்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இவ்வாறு எழுதியது "இங்கே கதைக்களம் மிகவும் சுமாராக இருக்கிறது, திரைக்கதை அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இல்லை. ஆனால் திறமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவதியின் அருமையான நடிப்புத்திறன் ஒட்டு மொத்தப் படம் நகர்வதற்கு மிகவும் துணை போகிறது." [5] "நியூ ஸ்டிரைட் டைம்ஸ்" இவ்வாறு எழுதியது. "கோவிலில் உள்ள குறி சொல்லிகளிடம் அடிக்கடி சென்று ஆலோசனை பெற விருப்பம் உள்ளவர்களுக்கு இப்படம் பிடிக்கும்" என எழுதியது.[6]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads