தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Indian National Defence University (INDU) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பினோலா எனுமிடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இராணுவம் தொடர்பான படிப்புகள் கற்றுக் கொடுக்கும் இந்திய அரசின் பல்கலைக்கழகம் ஆகும்.[1][2] இந்திய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டம், 2015-இன் படி, இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தில்லி-ஜெய்ப்பூர் விரைவுச் சாலையில், தில்லியிலிருந்து 65 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

சனவரி 2020-இல் இப்பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான சாலைகள் மற்றும் சுற்றுச் சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை வளாகம் மற்றும் வகுப்பறைகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.

Remove ads

நோக்கம்

  • ஆராய்ச்சி சார்ந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையை ஊக்குவித்தல்
  • இராணுவ கடமைகள் மற்றும் கொள்கைகள் வகுக்கும் பொறுப்புகளுக்கான அதிகாரிகளின் உயர் மட்ட தலைமையை மேம்படுத்துதல்
  • பாதுகாப்பு மேலாண்மை போன்ற பாதுகாப்பு ஆய்வுகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வியை மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல்.
  • பல்கலைக்கழக சிந்தனையாளர்கள் கொள்கை சூத்திரங்கள் உள்ளீடுகள் வழங்குகின்றனர்.

நிர்வாகம்

இப்பல்கலைத்தின் தலைவராக ஒரு இராணுவ அதிகாரியும், துணைத்தலைவராக ஒரு கல்வியாளரும் இருப்பார்.தன்னாட்சிப் பெற்ற இப்பல்கலைக்கழகம், இந்திய இராணுவத்தின் பல்வேறு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை தன்னின் உறுப்புக் கல்லூரிகளாகக் கொண்டு, பட்டங்கள் வழங்கும். இகு கற்பிக்கும் ஆசிரியர்கள் இராணுவ அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் 1:1 விகிதத்தில் இருப்பர்.[3]

அலகுகள்

இப்பல்கலைகழகத்தில் கீழ்கண்ட அலகுகள் செயல்படும்:

  • தொலைதூர மற்றும் திறந்த கற்றல் மையம்
  • பாதுகாப்பு மேலாண்மை பள்ளி
  • பாதுகாப்பு தொழில்நுட்ப பள்ளி
  • தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் பள்ளி

இதன் உறுப்புக் கல்வி நிறுவனங்கள்

படிப்புகள்

போர் மற்றும் அமைதிக் காலப் படிப்புகளில் மூலோபாய சிந்தனை, சீன ஆய்வுகள், யூரேசிய ஆய்வுகள், தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள், அண்டை நாட்டு ஆய்வுகள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு மூலோபாயம், கடல்சார் பாதுகாப்பு ஆய்வுகள், போர்க்களம் மற்றும் இராணுவத்தை அணிவகுத்தல், இராணுவக் கூட்டு தளவாடங்கள், எதிர்-கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும இராணுவத்திற்கு தேவையான பொருட்களை கையகப்படுத்தல் ஆகிய படிப்புகள் இப்பல்லகலைக்கழகத்தில் கற்றுத்தரப்படுகிறது.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads