தேசிய நெடுஞ்சாலை 275 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 275 கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை பெங்களூர் நகரில் துவங்கி மைசூர், மடிக்கேரி வழியாக மங்களூருக்கு கிழக்கே 25 கி.மீ தொலைவே அமைந்துள்ள வந்தவாழ் நகரம் வரை செல்கிறது.
இந்த சாலையின் மொத்த நீளம் 367 கி.மீ ஆகும்.
Remove ads
பெங்களூரு-மைசூர் விரைவுச்சாலை
தேசிய நெடுஞ்சாலை 275ன் ஒரு பகுதியான பெங்களூரு மற்றும் மைசூர் இடையேயான 117 தூரத்தை சுமார் 10 வழி விரைவுச்சாலையாக மாற்ற 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.[1] இந்த விரைவு சாலையில் 6 வழிகள் அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும், கூடுதலாகி 4 வழிகள் சேவை சாலைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக 2022 ஆம் ஆண்டு முடிக்கப்படவேண்டிய பணிகள் தாமதத்துடன் 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் நிறைவு பெற்றது.
திலிப் பில்டுகான் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மண்டியா, சிரீரங்கப்பட்டணம் உட்பட ஐந்து நகரங்களுக்கு பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. [2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads