மடிக்கேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மடிகேரி (கன்னடம்: ಮಡಿಕೇರಿ) கர்நாடக மாநிலம் (தென்னிந்தியா) குடகு மாவட்டத்தில் உள்ள நகரம். இந்நகரத்தின் மக்கள்தொகை 30,000.
கடல் மட்டத்திலிருந்து 1,170 மீ மேல் உள்ள இந்நகரம் கிழக்கே மைசூர் நகரையும், மேற்கே மங்களூர் நகரையும் கொண்டுள்ளது.
19ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட மடிக்கேரி கோட்டை இந்நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஒரு கோயில், திருச்சபை, சிறைச்சாலை மற்றும் சிறிய அருங்காட்சியம் ஒன்றும் உள்ளது.
இந்தக் கோட்டையின் அரச பீடத்தில் இருந்து நகரத்தின் பல பகுதிகளையும் கிராமப்புறப் பகுதிகளையும் காணலாம்.
Remove ads
சொற்பிறப்பியல்
1633 முதல் 1687 வரை குடகினை ஆண்ட முக்கிய ஆலேரி மன்னர் முத்துராஜாவின் நினைவாக மடிகேரி, முத்துராஜா கேரி[1] என்று அழைக்கப்பட்டது.[2][3] இது முத்துராஜாவின் நகரம் என்று பொருள்படும். 1834 முதல், பிரித்தானிய ஆட்சியின் போது, மெர்காரா என்று அழைக்கப்பட்டது. பின்னர் மைசூர் அரசால் மடிகேரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4][5]
மக்கள்தொகை
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மடிகேரியில் 33,381 மக்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 57.2% மற்றும் பெண்கள் 42.8%. மடிகேரியின் சராசரி கல்வியறிவு 85% ஆகும். இது தேசிய சராசரியான 69.3ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 80%. மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.[6]
புவியியல் மற்றும் காலநிலை
மடிக்கேரி, 1,170 மீ (3,840 அடி) உயரத்தில் உள்ளதால், வெப்பமண்டல உயர்நில காலநிலையைக் கொண்டுள்ளது. மடிகேரி 12.42°வ 75.73°கி-ல் அமைந்துள்ளது.[7][8] மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மடிகேரி ஒரு பிரபலமான மலைப்பிரதேச சுற்றுலா தலம் ஆகும். இதன் அருகிலுள்ள நகரங்கள் வடக்கே ஹாசன், மேற்கில் மங்களூரு மற்றும் கிழக்கே மைசூரு ஆகும். மடிக்கேரி அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் கண்ணூரில் அமைந்துள்ளது. இது 80 கி.மீ. (50 மைல்) தொலைவில் உள்ளது.
சராசரி தினசரி குறைந்தபட்ச வெப்பநிலை சனவரியில் 11 °C (52 °F) குறைவாக இருக்கும். கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 24 முதல் 27 °C (75 முதல் 81 °F) வரை இருக்கும்.[9] தென்மேற்கு பருவமழை தொடங்குவதால், சூன் மாதத்தில் வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. பதிவு செய்யப்பட்ட குறைந்த வெப்பநிலை 4.5 °C (40.1 °F) ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads