தேனி. சு. மாரியப்பன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேனி. சு. மாரியப்பன் (பிறப்பு: ஜனவரி 5, 1942) ஒரு தமிழக எழுத்தாளர். [1][2]
இவர் தமிழ்நாடு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தேனியில் வசித்து வரும் இவர் 1979 ஆம் ஆண்டு முதல் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் தேனி. எஸ். மாரியப்பன் எனும் பெயரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான நகைச்சுவைத் துணுக்குகள் எழுதியிருக்கிறார். பன்னாட்டுத் தமிழ் மன்றம் சார்பில் இவர் மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு போன்ற நாடுகளில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
வெளியான நூல்கள்
- வாங்குங்கள் சிரியுங்கள் - முதல் பதிப்பு-செப்டம்பர்-1992, இரண்டாம் பதிப்பு-அக்டோபர்-1994, மூன்றாம் பதிப்பு-அக்டோபர்-2000.
- நீங்க நல்லா சிரிக்கனும் - முதல் பதிப்பு-மார்ச்-1995
- அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்) - முதல் பதிப்பு-செப்டம்பர்-1998
- சிரிப்போம் கவலையை மறப்போம் - முதல் பதிப்பு-டிசம்பர்-1998
- அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்)-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-ஜீலை-2000
- ஜோக்ஸ் -கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000
- ஆ...ரம்ப ஜோக்ஸ்-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000
- அறிஞர்கள் அனுபவங்கள் சுவையான தகவல்கள்-முதல் பதிப்பு-2004
- விளக்கு பூஜையும் விரதமும் -முதல் பதிப்பு-2004
- சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...-முதல் பதிப்பு-மார்ச்-2004
- வாவ்...நியூஸ் (ஆச்சரிய நிகழ்வுகள்) -முதல் பதிப்பு-மார்ச்-2004, இரண்டாம் பதிப்பு-மே-2007
- வியப்பூட்டும் சாதனைகள் -முதல் பதிப்பு-2006
- தகவல் களஞ்சியம் -முதல் பதிப்பு-2006
- ஆன்மீகக் குறிப்புகள் -முதல் பதிப்பு-2006
- வழி காட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்) -முதல் பதிப்பு-2006
- திருவிளக்குப் பூஜை -கையடக்கப் பதிப்பு- முதல் பதிப்பு-2006
- காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்-முதல் பதிப்பு-மே-2007
- ஒரு வரித் தகவல்கள் -முதல் பதிப்பு-சூலை-2007
- சிரிக்கவும் சிந்திக்கவும் -முதல் பதிப்பு-அக்டோபர்-2007
- குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் -முதல் பதிப்பு-ஆகஸ்ட்-2008
- தத்துவ முத்துக்கள் - 2009
- காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் - முதல் பதிப்பு- சூலை-2009
- உலகிலேயே பெ...ரி...ய... தகவல்கள் - மே -2010
- வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - முதல்பதிப்பு - சூலை-2010
- சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் - முதல் பதிப்பு- ஆகஸ்ட்-2010
- முதன்மைத் தகவல்கள் - முதல்பதிப்பு - ஆகஸ்ட்-2010
- வேடிக்கை விநோதங்கள் - முதல் பதிப்பு - அக்டோபர்-2010
- வெற்றியின் ரகசியத் தத்துவம் - முதல் பதிப்பு - மே - 2012
- ஆலயங்கள் அற்புதங்கள் - முதல் பதிப்பு - ஆகஸ்ட் - 2012
- சிறுவர்களுக்கான பக்திக் கதைகள் - முதல் பதிப்பு - ஆகஸ்ட்-2012
- வழி காட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்), காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய நூல்கள் இந்திய அரசின் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களால் பாராட்டிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Remove ads
பரிசும் விருதும்
- "உரத்த சிந்தனை" அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது
- சி. பா. ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழக விருது
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads