தேவராகம்
1999 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவராகம் (Devaraagam) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள திரைப்படமாகும். பரதன் இயக்கிய இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். மேலும் இதில் கே. பி. ஏ. சி. இலலிதா, கோழிக்கோடு நாராயணன் நாயர், ஜீனத், நெடுமுடி வேணு ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் மரகதமணி ஆவார். [1] படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்பும் வெளியிடப்பட்டது. [2]
Remove ads
கதை
ஒரு சிறுவன் மாட்டு வண்டியில் ஏறிச் செல்ல, அவன் செல்லும் வண்டியுடன் செல்லுமாறு ஒரு சவுண்டியை (- 'சவுண்டி' என்பவர் இறுதி சடங்குகளைச் செய்து, சுடுகாட்டில் வாழும் ஒரு நபர்) வற்புறுத்துவதிலிருந்து படம் துவங்குகிறது. இறுதி சடங்குகளுக்கு அவர் இன்றியமையாதவர் என்றாலும், அவர் பெரும்பாலும் அச்சம்தரவல்லவராகவும், துரதிர்ஷ்டவசமானவராகவும் கருதப்படுகிறார். இறுதி சடங்கிற்கு மாட்டு வண்டியில் செல்லும் சிறுவன் 'சவுண்டி'யுடன் பேசத் தொடங்குகின்றான். அதன்பிறகு முன் நடந்த கதை நோக்கி கதை பயணிக்கிறது.
புதிய பூசாரியின் மகனும், பூசாரிக்கான பயிற்சி பெற்றுவரும் விஷ்ணு ( அரவிந்த்சாமி ) ஆகியோரை கிராமத்தில் காண்டபிறகு லட்சுமியின் வாழ்க்கை ( ஸ்ரீதேவி ) தலைகீழாக மாறுகிறது. லட்சுமியும் விஷ்ணுவும் காதலிக்கிறார்கள். ஆனால் சமுதாயத்தில் விஷ்ணுவின் நிலை காரணமாக பிரச்சினைகள் எழுகின்றன. அதாவது விஷ்ணு ஒரு பிரம்மாச்சாரி அவர் திருமணம் செய்ய முடியாது. இதற்கிடையில், லட்சுமியின் திருமணம் அவரது உறவினர் பார்த்தசாரதி ( ராஜீவ் கிருஷ்ணா ) உடன் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு லட்சுமியின் கணவரிடம் தான் விஷ்ணுவை நேசித்ததாக தெரிவிக்கிறாள். அது தனக்கு ஒரு பிரச்சனையல்ல என்று அவர் கூறுகிறார். இந்திலையில் லட்சுமி கர்ப்பமாக உள்ளாள். லட்சுமியின் கணவர் அவளிடம் தான் ஆண்மையற்றவன் என்று கூறுகிறார்.
தற்போது சில சூழ்நிலைகள் காரணமாக, லட்சுமியின் கணவர் இறந்துவிடுகிறார் என்றும், விஷ்ணுதான் சவுண்டியாக இறுதி சடங்கு செய்கிறார் என்றும் காட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்த லட்சுமி கோபமடைந்து, தன் பிள்ளையின் தந்தை உயிருடன் இருக்கும் நிலையில் தனது மகன் இறுதி சடங்குகளை செய்யக் கூடாது என்ற ரகசியத்தை கூறுகிறாள். பிள்ளையின் தந்தை வேறு யாருமல்ல விஷ்ணுதான். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
Remove ads
நடிகர்கள்
- அரவிந்த்சாமி விஷ்ணுவாக
- ஸ்ரீதேவி பாக்கியலட்சுமியாக (குரல் கொடுத்தவர் ரேவதி (நடிகை))
- கே. பி. ஏ. சி. இலலிதா அலுமேலுவாக
- நெடுமுடி வேணு சங்கரனாக
- சிப்பி இந்துவாக
- ஜெயேந்திரன் அரிகர சுப்பிரமணிய ஐயர்
- காவேரி
- எம். எஸ். திரிபுனிதுரா
- கோழிக்கோடு நாராயணன் நாயர்
- நரேந்திர பிரசாத் ராமதானபாடிகளாக
- பிரியங்கா அனூப்
- ரீனா
- ரவி மேனன்
- ஜீனத் மாலதியாக
- ரவளி கோகிலாவாக
- பர்
- இராஜீவ் கிருஷ்ணா பார்த்தசாரதியாக
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள் நாயகி பாத்திரத்துக்கு ஸ்ரீதேவியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, துவக்கத்தில் கஸ்தூரியை கருதினர். [3] ஸ்ரீதேவி உங்களது ஒரு படத்தில் நடிப்பார் என்று ஸ்ரீதேவியின் தாய் ராஜேஸ்வரி அய்யப்பன் பாரதனிடம் கூறியிருந்தார். இதுவே ஸ்ரீதேவி இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் ஆகும். [4]
இசை
படத்துக்கு மரகதமணி இசையமைத்தார். பாடல் வரிகளை எம். டி. ராஜேந்திரன் எழுதினார்.
- மலையாள பதிப்பு
- தமிழ் பதிப்பு (மொழிமாற்றம்)
- தெலுங்கு பதிப்பு (மொழிமாற்றம்)
Remove ads
விருதுகள்
இந்த படத்தில் சித்ரா பாடிய "சசிகலா சர்தியா" என்ற பாடலுக்காக 1996 ஆம் ஆண்டு கேரள அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை வென்றார். [5]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads