தேவேந்திர ஜஜாரியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவேந்திர ஜஜாரியா (Devendra Jhajharia) (பிறப்பு: 10 சூன் 1981) இந்திய தடகள வீரரும், ஒலிம்பிக், உலக சாம்பியன்சிப் மற்றும் ஆசியான் போட்டிகளில் ஈட்டி எறியும் வீரரும் ஆவார். இவர் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இரண்டு முறை ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். இவர் 2004 ஏதன்ஸ் இணை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தந்தவர்.[1] 2016 ரியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] தற்போது 40 வயதாகும் இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3]

Remove ads
இளமை வாழ்க்கை மற்றும் பின்னணி
தேவேந்திர ஜஜாரியா இராஜஸ்தான் மாநிலத்தின் சூரூ மாவட்டத்தில் 1981-ஆம் ஆண்டில் பிறந்தவர். எட்டு வயதில் மரத்தில் ஏறும் போது, உயர் அழுத்த மின் கம்பியில் இடது கை பட்டதால் செயலிழந்தது.[4][5]1997 இல் இவருக்கு ஆர். டி. சிங் என்பவர் வழிகாட்டுதலின் கீழ் ஈட்டி எறியும் விளையாட்டில் பயிற்சி பெற்றார். 2004 ஏதன்ஸ் கோடைக்கால் இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[6][7]
Remove ads
விளையாட்டுப் போட்டிகளில்
ஜஜாரியா 2002-இல் தென் கொரியாவில் நடைபெற்ற உடல் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகளில்[8] ஈட்டி எறிதல் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்றார். இவர் 2004 ஏதன்ஸ் இணை ஒலிம்பிக் போட்டியில் 62.015 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.[9]
2013-இல் பிரான்சு நாட்டின் லியான் நகரத்தில் நடைபெற்ற உலக இணை தடகள சாம்பியன்சிப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். 2014-ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியான் இணை விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2015-இல் தோகாவில் நடைப்பெற்ற உலக இணை சாம்பியன்சிப் போட்டியில் 59.06 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2016-இல் துபாய் ஆசியா-ஓசியானியா விளையாட்டுப் போட்டிகளில் 63.97 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். [2]
Remove ads
தனி நபர் வாழ்க்கை
முன்னாள் இந்திய இரயில்வே ஊழியரான தேவேந்திர ஜஜாரியா தற்போது இராஜஸ்தான் மாநில வனத்துறையில் பணிபுரிகிறார். இவருக்கு முன்னாள் கபடி வீராங்கனையான மஞ்சு என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது. [10]
விருதுகள்
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2017)
- பத்மசிறீ[11]
- அர்ஜுனா விருது (2004)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads