கேல் ரத்னா விருது
இந்தியக் குடியரசில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேல் ரத்னா விருது (அதிகாரப்பூர்வமாக: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது) என்பது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருது நரேந்திர மோடி அரசால் 2021 ஆம் ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் ₹750,000க்கு கூட்டப்பட்டது.[1]
1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
Remove ads
தேர்வு முறை
நடுவண் அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கிறது. பொதுவாக ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரையிலான காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.ஒலிம்பிக் விளையாட்டுக்கள்,ஆசிய விளையாட்டுகள் அல்லது உலக சாம்பியன்ஷிப் அல்லது உலக கோப்பை போட்டிகளில் இடம் பெற்றுள்ள விளையாட்டொன்றில் அந்த நபரோ குழுவோ பங்கெடுத்திருக்க வேண்டும். விளையாட்டையே பணிவாழ்வாகக் கொண்ட பில்லியர்ட்ஸ், சுனூக்கர் மற்றும் சதுரங்க வீரர்களும் தேர்வுக்கு உரியவர்கள். இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும். தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.[2] தேர்வுக்குழு தனது பரிந்துரையை அரசிற்கு அனுப்பியபின், அரசின் பல மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின், குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கே வழங்கப்படல் வழக்கம் என்ற போதிலும் விலக்குகள் உள்ளன.[3] எந்த விளையாட்டு வீரருமே வேண்டிய தகுதிகளைப் பெறவில்லையாயின் விருது அந்த ஆண்டிற்கு கொடுக்கப்படாது இருக்கலாம்.
Remove ads
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பட்டியல்
2017. - தேவேந்திர ஜஜாரியா(PARA)
2017. - சர்தார்சிங்
- 1993-94 ஆண்டில் இவ்விருது வழங்கப்படவில்லை.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads