பிரித்திவிராசு சவான்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரித்திவிராசு சவான் (Prithviraj Chavan) (மராத்தி:पृथ्वीराज चव्हाण}}) (பிறப்பு 17 மார்ச் 1946) மகாராட்டிர மாநில காங்கிரசு கட்சி அரசியல்வாதியும் இந்திய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் சார் அமைச்சராகப் பணியாற்றியவர்.11 நவம்பர் 2010 அன்று மகாராட்டிர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார்[1].நடப்பு முதல்வர் அசோக் சவான் ஆதர்ச வீட்டு வாரிய ஊழல் புகார்களை அடுத்து பதவி விலகியதை அடுத்து காங்கிரசுத் தலைமை இவரை தேர்வு செய்தது.
இலத்திரனியல் பொறியாளராகிய இவர் பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு வெற்றியடைய பலநாடுகளுக்கும் பிரதமரின் சார்பாக பயணித்து இந்திய நிலையை விளக்கி அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தின் மற்றும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் ஒப்புதல்களைப் பெறுவதில் பெரும் பங்காற்றினார்.
Remove ads
இளமை வாழ்வு
இந்தூரில் முதுபெரும் காங்கிரசு அரசியல்வாதி டி.ஆர் சவானின் புதல்வராக மார்ச் 17,1946ஆம் ஆண்டு பிறந்தார். பிட்சு, பிலானியில்மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பட்டப்படிப்பும் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லியில் பட்டமேற்படிப்பும் படித்தார்.[2] இந்திய அரசியலில் ராஜீவ் காந்தியின் தூண்டுதலில் நுழைவதற்கு முன்னர் அங்கு சிலகாலம் விமான அளவுக்கருவிகள் மற்றும் நிலத்தடி சண்டைகளுக்கு பயனளிக்கும் வகையில் ஒலிப்பதிவுக் கருவிகள் வடிவமைப்பில் பணியாற்றினார.
Remove ads
அரசியல் வாழ்வு
பிரித்திவிராசு 1991ஆம் ஆண்டு அவரது குடும்பக் கோட்டையாக விளங்கிய கராட் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் காலடி வைத்தார். இத்தொகுதியிலிருந்து 1991, 1996 மற்றும் 1998 ஆண்டுகளில் வென்றவர் 1999ஆம் ஆண்டு தேசியவாதிக் காங்கிரசின் சீனிவாச பாடீலிடம் தோல்வியடைந்தார்.[3] பின்னர் 2002 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடுவண் அமைச்சரவையில் சார் அமைச்சராக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம்,ஊழியர்,பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்,நாடாளுமன்ற நடப்புகள் அமைச்சரகம் ஆகியவற்றில் பணி புரிந்துள்ளார்.தற்போது பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.அணுவாற்றல் துறையின் மேற்பார்வையும் இவரிடம் சிலகாலம் இருந்தது.
விமரிசனங்கள்
மரபணு மாற்றுப் பயிர் பிரச்சினையில் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிலையை பரிந்துரைத்தார்.[4][5][6]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads