தோலகா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோலகா மாவட்டம் அல்லது தோல்கா மாவட்டம் (Dolakha), (நேபாளி: दोलखा जिल्लाⓘ), நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சரீகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 2,191 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்திற்கும் மேல் இமயமலையில் பரவியுள்ளது. இம்மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணகெடுப்பின் படி 1,86,557 ஆக உள்ளது.[1] இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையில் திபெத் அமைந்துள்ளது. நேபாள மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது.
Remove ads
பீமேஷ்வரர் கோயில்
இம்மாவட்டத்தின் தோலகா பஜாரில் அமைந்த பீமேஷ்வரர் கோயில் நேபாளி மக்களிடையே புகழ் பெற்றதாகும். இக்கோயில் உற்சவர் காலையில் பீமேஷ்வரராகவும், நண்பகலில் மகாதேவராகவும், மாலையில் திருமாலாகவும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
படக்காட்சிகள்


புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

தோலகா மாவட்டம் 54 கிராமிய நகராட்சிகளும், இரண்டு நகரபுற நகராட்சிகளையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads