தோஸ்த் நடவடிக்கை
இந்தியாவின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோஸ்த் நடவடிக்கை (Operation Dost), துருக்கி-சிரியா நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட இந்திய அரசு மேற்கொண்ட மீட்புப் பணிகளைக் குறிக்கிறது.[1]6 பிப்ரவரி 2023 அன்று துருக்கி நாட்டின் காசியான்டெப் நகரத்திற்கு மேற்கே 34 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் கொண்டிருந்தது.[2]
சொற்பிறப்பு
தோஸ்த் என்பதற்கு இந்தி மொழி[3] மற்றும் துருக்கிய மொழியில்[4] நண்பன் எனப்பொருளாகும்.
தோஸ்த் நடவடிக்கைகள்

6 பிப்ரவரி 2023 அன்று காலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வருத்தம் தெரிவித்ததுடன், துருக்கி மற்றும் சிரியாவுடன் இந்தியாவின் ஒற்றுமையை தெரிவித்தார்.[5] அதே நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சரவைக் குழு, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வானூர்தி அமைச்சகம் மற்றும் சுகாரதார அமைச்சகங்களுடன் கலந்து பேசினார்.[6]
நிலநடுக்கம் ஏற்பட்ட 12 மணி நேரத்தில் இந்திய இராணுவம் நிவாரணப் பொருட்களுடன், மீட்புக் குழுக்கள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு செல்வதற்கு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.[7]
துருக்கியில் மீட்பு நடவடிக்கைகள்

துருக்கி நிலநடுக்கத்தின் போது உதவிட வந்த நாடுகளில் முதலாவாக உதவிக்கரம் நீட்டியது இந்தியா என துருக்கி குறிப்பிட்டுள்ளது.[8]நிலநடுக்கம் ஏற்பட்ட 6 பிப்ரவரி 2023 அன்று மாலையே இந்திய மீட்புக் குழுவினர், நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டனர். [9]பாதிக்கப்பட்ட அடானா நகரத்திற்கு இந்திய வான்படையின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்தி மூலம், நிவாரணப் பொருட்கள், மோப்ப நாய்களுடன் 47 மீட்புப் படையினர் சென்றடைந்தனர்.[10]

நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துப் பொருட்கள், உணவு மற்றும் பிற உதவிகளை ஆளில்லாத வானூர்திகள் மூலம் வழங்கினர்.[11]தேசியப் போரிட மீட்புப் படையினர் கட்டிட இடுபாடுகளை அகற்றும் கருவிகளை கருவிகளைக் கொண்டு, கட்டிட இடுபாடுகளில் சிக்கிய மக்களை வெளியே கொண்டு வந்தனர்.[12]
7 பிப்ரவரி 2023 அன்று இந்திய வான் படை நிவாரணப் பொருட்கள், நகரும் மருத்துவமனை, மீட்புக் குழுவினருடன் மேலும் இரண்டு போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்திகளை துருக்கிக்கு அனுப்பியது.[13][14]மீட்புக் குழுவினருடன் ஆக்ராவை மையமாகக் கொண்ட இராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை, உடற்பரிசோதனை கருவிகளுடன் அனுப்பப்பட்டனர்.[15]9 பிப்ரவரி 2023 வரை இந்தியா துருக்கிக்கு 6 போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்திகளில் மீட்புப் படையினர் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பியது.[16][17]
ஏழாதுவ வானூர்தி, மருத்துவ நிவாரணப் பொருட்களுடன் துருக்கியின் அடானா நகரத்தின் வானுர்தி நிலையத்திற்கு 12 பிப்ரவரி 2023 அன்று சென்றடைந்தது.[18]
துருக்கியின் இஸ்கென்தெருன் நகரத்தில் தற்காலிக மருத்துவமனையை நிறுவிய பின்னர், நிவாரண பணிகளை முடித்துக் கொண்டு மருத்துக் குழுவினர் 20 பிப்ரவரி 2023 அன்று இந்தியா திரும்பினர்.[19][20]
சிரியாவில் மீட்பு நடவடிக்கைகள்

சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக சிரியாவுக்கான மீட்புப் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 8 பிப்ரவரி 2023 அன்று 6 டன் அளவிற்கு அவசர கால மருத்துவ நிவாரணப் பொருட்களுடன் டமாஸ்கஸ் வானூர்தி நிலையத்திற்கு இந்திய வானூர்தி சென்றடைந்தது. [21]
12 பிப்ரவரி 2023 அன்று இந்திய வான் படையின் சரக்கு விமானங்கள் 23 டன் நிவாரணப் பொருட்களுடன் டமாஸ்மஸ் வானூர்தி நிலையத்திற்கு சென்றது.[22]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads