நந்தனார் (1942 திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

நந்தனார் (1942 திரைப்படம்)
Remove ads

நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைவிட பாபநாசம் சிவனின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இபடத்தில் கொத்தமங்கலம் சுப்பு துணை இயக்குநராக பணியாற்றியதுடன் சில பாடல்களை எழுதியும் நடித்தார்.[3]

விரைவான உண்மைகள் நந்தனார், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

  • வி. பி. எஸ். மணி (வெள்ளை)
  • ராமசாமி பிள்ளை (பெரிய கிழவன்)
  • புலியூர் திரைசாமி ஐயர் (வெறியன்)
  • ராஜம் ஐயங்கார் (மாமுண்டி)
  • ஞானாம்பாள் (வேதியர் மனைவி)
  • ஜெயலட்சுமி அம்மாள் (நந்தனின் தாயார்)
  • அங்கமுத்து (வெள்ளச்சி)
  • எம். எஸ். சுந்தரி பாய் (கருப்பி)
  • சக்குபாய் (வீரி)

நடனம்

Remove ads

பாடல்கள்

விரைவான உண்மைகள் Soundtrack எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வர ராவ், வெளியீடு ...
  1. ஆனந்த நடமிடும் பாதன்
  2. பிறவா வரம் தாரும் (இராகம்: லதாங்கி, ஆதி தாளம், தேசிகர்)
  3. மஞ்சக் குளிச்சவனே மருக்கொழுந்து வச்சவனே (தெம்மாங்கு, கிருஷ்ணமூர்த்தி)
  4. சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் (நாதநாமக்கிரியை, ரூபகம், தேசிகர்)
  5. நட்டநடவு செழிக்கவேணும் (வழிநடைச் சிந்து)
  6. பாவிப்பறையன் இந்த ஊரில் வந்துமிவன் (தோடி, ஆதி, தேசிகர்)
  7. எனக்குமிரங்கினான் எம்பிரான்(கேதாரகௌளை, மிச்ரம், தேசிகர்)
  8. ஹரஹரஹரஹர மகாதேவா (பஜனை, நவரோஜு இராகம், ஆதி)
  9. கனகசபையைக் கண்ட பிறகோர் காட்சியுமுண்டோ (காபி, ரூபகம், தேசிகர்)
  10. எல்லோரும் வாருங்கள் சுகமிருக்குது பாருங்கள் (பிலகரி, ஆதி, தேசிகர்)
  11. காக்க வேண்டும் கடவுளே (பந்துவராளி, ஆதி, தேசிகர்)
  12. தில்லையம்பலத் தலமொன்றிருக்குதாம் (ராகமாலிகை-ரூபகம், தேசிகர்)
  13. சிதம்பர தெரிசனமா (முகாரி-ஆதி, தேசிகர்)
  14. காணவேண்டாமோ - இருகண் இருக்கும்போதே (ஸ்ரீரஞ்சனி-ஆதி, தேசிகர்)
  15. அம்பலப் பாட்டே அருள் பாட்டு (பீலு-ஆதி, இராமசாமிப் பிள்ளை)
  16. வீரன் இருளன் காட்டேரி (பெரிய கடுக்கா, சேரி மக்கள்)
  17. எல்லைப் பிடாரியே (அகவல், சேரி மக்கள்)
  18. சபோ சங்கர சாம்பசிவா (பஜனை, மிச்ரம்-த்ரி தாளம்)
  19. வரவரக் கெட்டுப் போச்சு சேரியில் (நொண்டிச் சிந்து, சேரி மக்கள்)
  20. ஜாதியிலும் கடையேன் மறையாகம நூல்கள் (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)
  21. பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது (சங்கராபரணம்-ஆதி, தேசிகர்)
  22. கனிஞ்ச பழம் மேல் ஆசைப்பட்டு கலங்கி நிக்கிறே (குறம், சுந்தரிபாய்)
  23. உனையல்லால் கதியார் உலகிலே (பலஹம்ச-ஆதி, செருக்களத்தூர் சாமா)
  24. காமமகற்றிய தூயனவன் (கும்மி, தேசிகர்)
  25. உயரப் பனை மேல் கலையம் தொங்குதாம் (எம். ஆர். சுவாமிநாதன்)
  26. ஹரஹர ஜகதீசா அருள்புரி பரமேசா (சிந்துபைரவி, தேசிகர்)
  27. என்னப்பனல்லவா எந்தாயுமல்லவா (வராளி, பஜனை, தேசிகர்)
  28. ஏழைப் பார்ப்பான் செய்திடும் பிழையை ஏற்றுக் கொள்ளாதே (சிம்மேந்திர மத்யம், ஆதி, செருக்களத்தூர் சாமா)
  29. ஐயே மெத்தக்கடினம் உமதடிமை (ராகமாலிகை-ஆதி, தேசிகர்)
  30. வருகலாமோ ஐயா நாமங்கே (மாஞ்சி-மிச்ரம், தேசிகர்)
  31. வீறாடுமுயலகன் முதுகில் ஒரு கால் வைத்த (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads