நம்பியூர்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

நம்பியூர்map
Remove ads

நம்பியூர் (Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நம்பியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.37°N 77.33°E / 11.37; 77.33 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது

அமைவிடம்

நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கி.மீ.; வடக்கில் சத்தியமங்கலம் 26 கி.மீ.; தெற்கில் அவிநாசி 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

24.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 மக்கள்தொகையும் கொண்டது. [6]

பள்ளிகள்

நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.

  1. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  2. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கெடாரை
  3. அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்,நம்பியூர்
  4. அரசு ஆரம்பப் பள்ளி,நம்பியூர்
  5. குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  6. காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  7. ஆலயம் மெட்ரிக் பள்ளி,நம்பியூர்
  8. அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.

கோவில்கள்

நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன

  1. அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
  2. திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
  3. அருள்மிகு திரு ஆண்டவ குல அய்யன் திருக்கோவில்,புது சூரிபாளையம்
  4. அருள்மிகு திட்டமலை திரு குழந்தை குமாரசுவாமி திருக்கோவில், திட்டமலை
  5. மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
  6. காமாட்சி அம்மன் கோவில் காந்திபுரம், நம்பியூர்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads