நரசராவ்பேட்டை

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நரசராவ்பேட்டை (Narasaraopet) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், குண்டூர் மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். மேலும் இந்நகரம் நரசராவ்பேட்டை மண்டலம் மற்றும் நரசராவ்பேட்டை வருவாய் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.[3][4]

விரைவான உண்மைகள் நரசராவ்பேட்டை, நாடு ...
Remove ads

அமைவிடம்

நரசராவ்பேட்டை குண்டூர் நகரத்திலிருந்து 48 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 441 கி.மீ. தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 95 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நரசராவ்பேட்டையின் மொத்த மக்கள்தொகை 1,16,250 ஆகும். அதில் ஆண்கள் 58,809 ஆகவும், பெண்கள் 57,441 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 11,031 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 79.59 % ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 75.67% ஆகவும், இசுலாமியர் 22.52% ஆகவும், கிறித்தவர்கள் 1.52% ஆகவும், மற்றவர்கள் 0.29% ஆகவும் உள்ளனர்.[5]

Remove ads

நகராட்சி நிர்வாகம்

18 மே 1915ல் நிறுவப்பட்ட நரசராவ்பேட்டை நகராட்சி, 28 ஏப்ரல் 1980 அன்று 7.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் விரிவாக்கம் அடைந்தது.[1]

போக்குவரத்து

குண்டூர் - கர்னூல் / அனந்தபூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 522டி, நரசராவ்பேட்டை பைபாஸ் சாலை வழியாகச் செல்கிறது. மாநில நெடுஞ்சாலை எண் 45 இந்நகரம் வழியாகச் செல்கிறது. இந்நகரம் 157.08 நீள சாலைகள் கொண்டது.[6]

நரசராவ்பேட்டை தொடருந்து நிலையம் மூன்று நடைமேடைகள் கொண்டது.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads