நவ்செரா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவ்செரா மாவட்டம் (Nowshera District) (பஷ்தூ: نوښار ولسوالۍ, Urdu: ضلع نوشہرہ),பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இது பெசாவர் கோட்டத்தில் உள்ளது.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் நவ்செரா நகரம் ஆகும். நவ்செரா நகரம், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 1,748 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 608 பேர் வீதம் உள்ள்னர். இதன் வேளாண்மைப் பரப்பளவு 52,540 எக்டேர் ஆகும்.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 15,20,995 ஆகும். அதில் ஆண்கள் 783,035 மற்றும் பெண்கள் 737,834 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 58.21% ஆகும். 77.68% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 7,096 பேர் மட்டுமே உள்ளனர்.[1]இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழி 92.82%, பஞ்சாபி மொழி 2.04%, இண்டிக்கோ மொழி 3.06% மற்றும் பிற மொழிகள் 1.15% மக்களால் பேசப்படுகிறது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
தாலுகாக்கள்
இம்மாவட்டம் 3 தாலுகாக்கள் கொண்டது.[3][4]அவைகள்:
- நவ்செரா தாலுகா
- ஜெகான்கீரா தாலுகா
- பாப்பி தாலுகா[5]
ஒன்றியக் குழுக்கள்
இம்மாவட்டம் 47 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள்
இம்மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 5 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 2 தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads