நாக்பூர் அரசு

From Wikipedia, the free encyclopedia

நாக்பூர் அரசுmap
Remove ads

நாக்பூர் அரசு அல்லது நாக்பூர் இராச்சியம் (Kingdom of Nagpur), தற்கால மத்தியப் பிரதேசத்தின் கோண்டு ஆட்சியாளர்கள் 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவினர்.[1] பின்னர் 1739ல் நாக்பூர் அரசை மராத்திய போன்சலே வம்சத்தினர் கைப்பற்றி மராத்தியப் பேரரசில் இணைத்தனர். நாக்பூர் நகரம், நாக்பூர் இராச்சியத்தின் தலைநகராகும்.

விரைவான உண்மைகள்
Thumb
நாக்பூர் நகரத்தில் ராகோஜி போன்சலே கட்டிய நாகர்தன் கோட்டை

மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போருக்குப் பின்னர் நாக்பூர் இராச்சியம், 1818ல் கிழக்கிந்தியக் கம்பெனி விதித்த துணைப்படைத் திட்டத்தை ஏற்று, கம்பெனி ஆட்சிக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக விளங்கியது.

நாக்பூர் இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் ராகோஜி காலத்திற்கு பின், நாக்பூர் இராச்சியம் வாரிசுரிமையற்று இருந்ததால், அவகாசியிலிக் கொள்கையின் படி, நாக்பூர் இராச்சியத்தை, 1853ல் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1861ல் நாக்பூர் மாகாணம் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [2]

இந்திய விடுதலைக்குப் பின் 1948ல் நாக்பூர் இராச்சியத்தின் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Remove ads

நாக்பூர் அரசின் ஆட்சியாளர்கள்

Thumb
மராத்திய போன்சலே வம்சத்தவர்கள் கட்டிய நாகர்தன் கோட்டையின் நுழைவாயில்

மராத்திய போன்சலே வம்சத்தவர்கள் நாக்பூர் இராச்சியத்தை 1739 முதல் முடிய ஆண்டனர்.

  • ரகோஜி போன்சலே (1739 – 1755)
  • ஜனோஜி போன்சலே (1755 - 1772)
  • இரண்டாம் ரகோஜி (1755-1816)
  • இரண்டாம் முத்தோஜி போன்சலே (1817 - 1818)
  • மூன்றாம் ரகோஜி (1818 - 1853)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads