நாடாளுமன்ற நிதிக் குழு (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிதித்தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு (Standing Committee on Finance (SCOF), இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இக்குழுவில் மக்களவையின் 21 உறுப்பினர்களும், மாநிலங்களவியின் 10 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். [1]இக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். இக்குழுவின் தலைவரை இந்திய மக்களவைத் தலைவர் நியமிப்பர்.
Remove ads
குழுவின் பணிகள்
கீழ்கண்ட அமைச்சகங்களின் கொள்கைகள் மற்றும் எடுத்த கொள்கை முடிவுகளையும், ஆண்டறிக்கைகளையும் ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தலே இக்குழுவின் பணியாகும்.
- நிதி அமைச்சகம்
- பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
- நிதி ஆயோக்
இக்குழுவின் அண்மைய ஆண்டுகளின் பணிகள்
இக்குழுவின் அண்மைய ஆண்டின் குறிப்பிடத்தக்க பணிகள்
- 2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் விளக்கம் கோரியது.
- 2016-இல் இந்திய இருப்புப்பாதை நிதியறிக்கையை தனியாக வெளியிடாது, பொது நிதிநிலை அறிக்கையுடன் இணைத்து வெளியிடப்பட்டது. [5]
- பஞ்சாப் நேசனல் வங்கியில் 1,400 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக இக்குழு 2018-இல் நிதி அமைச்சகத் தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகளை விசாரித்தது. [6]
- இக்குழு 2018-இல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதிச் சேவை நிறுவனத்தின் (Infrastructure Leasing & Financial Services) நிதி மோசடிகளை ஆய்வு செய்து, அந்நிறுவனத்தின் 15 இயக்குநர்களை நீக்கியது. [7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads