பொது கணக்குக் குழு (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொது கணக்குக் குழு என்பது இந்திய நாடாளுமன்றத்தால், இந்திய அரசின் செலவுகளை தணிக்கை செய்ய அமைக்கப்படும் குழுவாகும். [1][2]

அமைப்பு

ஆண்டுதோறும் பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.[3] உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு ஆண்டு ஆகும். குழுவின் தலைவர் மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார். 1967 ல் இருந்து குழுவின் தலைவராக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். [4]

தற்பொது பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மக்களவை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்திரி 1 மே 2020 முதல் 30 ஏப்ரல் 2021 வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

Remove ads

பணிகள்

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பொதுக் கணக்கு குழு அரசின் வரவு, செலவுகளை பரிசீலனை செய்யும். நிதிச் சட்டம் மூலமாக வரி விதிக்கவும் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் மூலமாக ஒவ்வொரு அமைச்சகமும் செலவுகளை செய்யவும் பாராளுமன்றம் இந்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்குகிறது. இந்தச் சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி அரசு வரி வருவாய் பெற்றிருக்கிறதா, செலவுகளை செய்திருக்கிறதா என்று பொதுக் கணக்கு குழு ஆராயும். இதில் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பொதுக் கணக்குக் குழுவிற்கு உதவி செய்வார்.

பொதுக் கணக்குக் குழுவின் முன் ஒவ்வொரு அமைச்சகத்தின் அதிகாரிகள் வந்து இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரும் பொது கணக்கு குழுவும் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலும் விளக்கங்களும் அளிப்பர். அமைச்சர்கள் பொது கணக்கு குழு முன் விளக்கம் அளிப்பதில்லை. சில நேரங்களில் பொது கணக்கு குழு ஒரு துறையின் அமைச்சரை சந்தித்து இறுதியாக தனது முக்கிய பரிந்துரைகளை கூறலாம். [6]

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads