நாடாளுமன்றக் கூட்டுக் குழு (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாடாளுமன்றக் கூட்டுக் குழு (Joint Parliamentary Committee (JPC) இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தற்காலிக் குழுவாகும்[1][2] தற்காலிகமாக அமைக்கப்படும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, இந்திய அரசின் துறைகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரித்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும்.[3]

குழுவின் அமைப்பு

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்கள் கலந்து பேசி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்படும்.[4] நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்ப்பினர்கள் விட மக்களவை உறுப்பினர்கள் இரண்டு மடங்காக இருப்பர். இக்கூட்டுக் குழுவிற்கு ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.[5]

அதிகாரங்கள்

இந்தியாவின் அரசுத் துறை அல்லது துறைகளில் பெருமளவில் நட்டம், ஊழல்கள் மற்றும் கொள்கை முடிகளை மீறிய செயல்களை கண்டு ஆராய்ந்து முடிவு எடுப்பதற்கு அவ்வப்போது கூட்டப்படும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, தொடர்புடைய துறைகளின் வல்லுநர்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் ஆகியவர்களை அழைத்து கருத்துகள் பெறவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் கொண்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழு கேட்டும், நேரில் வராதவர்களை, நாடாளுமன்றத்தை அவமதிப்பு செய்தவராகக் கருதப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு தொடர்புடைய குற்றச் செயல்கள் குறித்து, தொடர்புடையவர்களிடமிருந்து நேரடி சாட்சியங்களை, ஆவணங்கள் மூலமாக அல்லது வாய்மொழியாகக் கேட்டுப் பெறும்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் நடவடிக்கைகள் இரகசியமாக நடைபெறும். இருப்பினும் பங்குப் பத்திரங்கள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் குறித்தான முறைகேடுகள் வாடிக்கையாளர்கள் நலன் கருதி, செய்தி ஊடகங்கள் மூலம் குழுவின் தலைவர் அறிவிப்பார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவானது பொதுவாக மத்திய அமைச்சர்களை சாட்சியம் கூற அழைக்காது.

இருப்பினும், பங்குப் பத்திரங்கள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் தொடர்பான முறைகேடுகளில், மத்திய அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் எனில், மக்களவைத் தலைவரின் முன் அனுமதியுடன், மத்திய நிதி அமைச்சரை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்கலாம்.

அரசின் பாதுகாப்பு நலன் கருதி, ஆவணங்களை நாடளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு வழங்க மறுக்க, இந்திய நடுவண் அரசுக்கு அதிகாரம் உள்ளது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு, ஒரு நபருக்கு எதிராக சாட்சியம் அல்லது ஆவணங்கள் பெறுவதில் உள்ள பிணக்குகள் மீது முடிவு எடுக்க மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.[6]

Remove ads

இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயல்பாடுகள்

போபர்ஸ் ஊழல் (1987)

இந்தியாவில் முதல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, ஆகஸ்டு 1987-இல் போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் நடைபெற்ற முறைக்கேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஆளும் அரசின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக கொண்டிருந்ததால், எதிர்கட்சிகள் இக்கூட்டுக் குழுவை புறக்கணித்தது. இக்கூட்டுக் குழு தனது விசாரணை அறிக்கையை 23 ஏப்ரல் 1988-இல் நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் வழங்கியது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் அறிக்கையை, எதிர்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.[7]

ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் (1992)

இந்தியாவின் இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டுக் குழு, இந்தியப் பங்குச் சந்தையின் பங்கு பத்திரங்கள் மற்றும் வங்கிப் பரிபர்த்தனைகளில் ஹர்சத் மேத்தா என்பவர் செய்த முறைகேடுகளை விசாரிக்க, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மத்திய அமைச்சர் இராம் நிவாஸ் மிர்தா தலைமையில் ஆகஸ்டு 1992-இல் அமைக்கப்பட்டது. இக்கூட்டுக் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் மறுக்கவும் இல்லை.

கேத்தான் பரேக் செய்த பங்குச் சந்தை ஊழல் (2001)

2001-இல் கேத்தான் பரேக் எனும் பங்குச் சந்தை வணிகர் பங்குப் பத்திரங்கள் விற்பனை மற்றும் கொள்முதல்களில் செய்த ஊழல்களை விசாரிப்பதற்கு மூன்றாவது நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஏப்ரல் 2011-இல் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் மணி திரிபாதி தலைமை தாங்கினார். இக்குழு 105 அமர்வுகளில் நடததிய விசாரணையின் அறிக்கை 13 திசம்பர் 2002 அன்று நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்தது. இக்குழு பங்கு பரிவர்த்தனைகளை குறித்தான தனது பரிந்துரைகளை இந்திய அரசு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.[8]

குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து பிணக்கு (2003)

பொதுமக்கள் பருகும் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பது குறித்து விசாரணை நடத்த, நான்காவது நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆகஸ்டு 2003-இல் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் நிறுவப்பட்டது. இக்குழு 17 அமர்வுகளில் விசாரணை நடத்தி, குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லிய மருந்துகள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தி தனது அறிக்கையை 4 பிப்ரவரி 2004-இல் நாடாளுமன்றத்திற்கு வழங்கியது. இக்கூட்டுக் குழுவின் பரிந்துரைகளை குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு (2011)

ஐந்தாம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, பிப்ரவரி 2011-இல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க, பி. சி. சாக்கோ தலைமையில், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குழு நிறுவப்பட்டது.[9]30 பேர் கொண்ட இக்குழுவில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட 15 எதிர்கட்சி உறுப்பினர்கள் இருந்தனர். கூட்டுக் குழுவின் தலைவர் பி. சி. சாக்கோ, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியவர்களுக்கு எத்தொடர்பும் இல்லை என முதற்கட்ட வரைவு அறிக்கை நாடாளுமன்றத்தில் வழங்கினார். எனவே கூட்டுக் குழுவின் எதிர்கட்சி உறுப்பினர்கள், கூட்டுக் குழு தலைவர் பி. சி. சாக்கோவை கூட்டுக் குழு தலைவர் பதவியிலிருந்து அகற்றக் கோரினர்.[10]) பின்னர் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ தனது வரைவு அறிக்கை மாற்றி அமைக்க ஒப்புக் கொண்டார். report.[11]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads