நாட்டாமை (திரைப்படம்)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நாட்டாமை (திரைப்படம்)
Remove ads

நாட்டாமை (Naattamai), 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரு வேடங்களில் (அண்ணன் தம்பி கதாப்பாத்திரங்களை ஏற்று) நடித்து இருந்தார். இவருடன் குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம், ராணி ஆகியோரும் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர்.

விரைவான உண்மைகள் நாட்டாமை, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

சரத்குமார் அந்த ஊரின் நாட்டாமை. அவரின் நீதிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள். அவருக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் மற்றொரு சரத்குமார். இன்னொருவர் ராஜா ரவீந்தர். இவர்கள் இருவரும் அண்ணனுக்கு மிகவும் கட்டுப்பட்டு நடப்பார்கள். சரத்குமார் குடும்பத்திற்கும் பொன்னம்பலம் குடும்பத்தினர்க்கும் நீண்ட நாட்களாக பகை இருந்து வருகிறது. இதற்கான காரணம் பிளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது.
பிளாஷ் பேக்: பொன்னம்பலம் அந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை மானபங்கம் செய்து விடுகிறார். பிரச்சனை பஞ்சாயத்திற்கு வருகிறது. அப்போது அந்த ஊரின் நாட்டாமையாக இருக்கும் விஜயகுமார் அது பற்றி விசாரிக்க பஞ்சாயத்திற்கு செல்லும் போது பொன்னம்பலத்தின் தந்தை அவரது குடும்பத்திற்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல வலியுறுத்துகிறார். ஆனால் அதை விஜயகுமார் மறுத்து நியாயப்படியே தீர்ப்பு சொல்வேன் என்று கூறி விடுகிறார். பஞ்சாயத்தில் விஜயகுமார் சாட்சிகளை விசாரிக்கும் போது, பெண்ணின் உறவினர்களின் சாட்சிகளை ஏற்க மறுத்து பெண்ணின் குடும்பத்தினர்க்கு சம்பந்தம் இல்லாத ஒரு சாட்சியை ஏற்று பொன்னம்பலம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்குகிறார். இது பிடிக்காத பொன்னம்பலத்தின் தந்தை விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். இறக்கும் தருவாயில் இருக்கும் விஜயகுமார் பொன்னம்பலம் குடும்பத்தினரை 18 ஆண்டுகள் தள்ளி வைக்கிறார். பின்னர் சரத்குமாரிடம் "தீர்ப்பு வழங்கும் போது சொந்தம் பந்தம் எதையும் பார்க்க கூடாது. நியாயப்படி செயல்பட வேண்டும்" என்று கூறி இறந்து விடுகிறார்.
சரத்குமார் குடும்பத்தை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற வெறியில் பொன்னம்பலம் ஒரு பெண்ணை டீச்சர் ஆக ஊருக்குள் அனுப்பி வைக்கிறார். எப்படியாவது தம்பி சரத்குமாரை அந்த பெண்ணை வைத்து மயக்கி சரத்குமார் குடும்பத்தினர்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி தர முயல்கிறார். ஆனால் அது முடியாமல் போகவே, அந்த பெண்ணை கொலை செய்து விடுகிறார். அந்த சாவுக்கு காரணம் நாட்டாமையின் தம்பி என்று அந்த பெண்ணின் கையால் எழுத வைத்து அந்த பெண்ணை தூக்கில் தொங்க விட்டு விடுகிறார். பிரச்சனை பஞ்சாயத்திற்கு வரும் போது அண்ணன் சரத்குமார் தந்தை விஜயகுமார் சொன்னதை நினைவு கொண்டு நியாயப்படி நடக்க முடிவு கொள்கிறார். பஞ்சாயத்தில் சாட்சிகள் தம்பி சரத்குமாருக்கு எதிராக இருப்பதால் அவருக்கு தண்டனை அளிக்கிறார். இந்த சூழலில் ராஜா ரவீந்தர்க்கும் பொன்னம்பலம் மகள் சங்கவிக்கும் காதல் வருகிறது. இதை பொன்னம்பலம் எதிர்க்கிறார். ஆனால் சங்கவி தனது காதலில் உறுதியாக இருப்பதால் அண்ணன் சரத்குமார் இந்த திருமணத்தை நடத்தி வைக்க உறுதி கொள்கிறார். இதனால் பொன்னம்பலம் மற்றும் அண்ணன் சரத்குமாருக்கு மோதல் ஏற்படுகிறது. இதில் பொன்னம்பலத்தை வெற்றி கொள்ளும் அண்ணன் சரத்குமார் தனது தம்பிக்கு தவறான தீர்ப்பு அளித்ததை அறிந்து கொண்டு அந்த அதிர்ச்சியில் இறந்து போகிறார். பின் தம்பி சரத்குமார் ஊருக்கு நாட்டாமையாக ஆகிறார்.

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2]

மேலதிகத் தகவல்கள் பாடல், காடகர்(கள்) ...

விருதுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads